மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய கோபால் ரத்னா விருது -2025க்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன

Posted On: 14 AUG 2025 6:05PM by PIB Chennai

மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு, பால்வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும்கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, 2025-ம் ஆண்டிற்கான தேசிய கோபால் ரத்னா விருதுக்கான பரிந்துரைகளை வரவேற்கிறது.  https://awards.gov.in மற்றும் https://dahd.nic.in ஆகிய வலைத்தளங்கள் மூலம் 2025 ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம். தேசிய பால் தினமான நவம்பர் 26, 2025 முன்னிட்டு விருதுகள் வழங்கப்படும்.

பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள், பால் கூட்டுறவு சங்கங்கள், வேளாண் உற்பத்தி அமைப்புகள், செயற்கை கருவூட்டல் வல்லுநர்கள் உள்ளிட்டோரை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், இத்துறை தேசிய கோபால் ரத்னா விருதினை வழங்குகிறது. குறிப்பாக உள்நாட்டு கால்நடை இனங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

தேசிய கோபால் ரத்னாவிருது 2025 என்பது சான்றிதழ், ரொக்கப்பரிசு, நினைவுப்பரிசு ஆகியவற்றைக் கொண்டதாகும்.

முதல் இடத்திற்கு ரூ.5 லட்சமும்

2-வது இடத்திற்கு ரூ.3 லட்சமும்

3-வது இடத்திற்கு ரூ.2 லட்சமும்

வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்பு பரிசாக ரூ.2 லட்சமும் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2156488

****

(Release ID: 2156488)

SS/RB/RJ


(Release ID: 2156738)
Read this release in: English , Urdu , Hindi