சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத்தலைவரின் அழைப்பை விநியோகம் செய்வதில் தமிழ்நாட்டு அஞ்சல்துறையின் பங்களிப்பு
Posted On:
13 AUG 2025 3:47PM by PIB Chennai
சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத்தலைவர் ஏற்பாடு செய்துள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான அழைப்பிதழ்களை விநியோகம் செய்யும் பணியில் தமிழ்நாடு அஞ்சல் துறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி குடியரசுத்தலைவர் மாளிகையில் ஆகஸ்ட் 15 அன்று நடைபெறவுள்ளது.
இதன் முக்கியத்துவம் கருதி தமிழ்நாட்டில் இந்த அழைப்பிதழை உரியவர்களுக்கு விநியோகம் செய்வதில் அஞ்சல் துறை உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. இதற்கென உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக குழுவிற்கு இந்த முக்கியத்துவம் வாய்ந்த பணியை சிறப்பாக மேற்கொள்ள ஏதுவாக பயிற்சி வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த அழைப்பிதழை உரிய நபரிடம் சேர்ப்பதை உறுதி செய்யும் வகையில், இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தாங்கள் சார்ந்த பணிகளில் சிறப்பாக பங்காற்றியவர்கள் உட்பட பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு இந்த அழைப்பிதழ் வழங்கப்படுகிறது. மருத்துவர்கள், ஆயுஷ் மருத்துவ சிகிச்சை அளிக்கும் நிபுணர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், எரிசக்திப் பாதுகாப்பில் சிறந்து செயலாற்றியவர்கள் மற்றும் பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், பிரதமரின் ஸ்வநிதித் திட்டம், பிரதமரின் விஸ்கர்மா திட்டம், பிரதமரின் உஜ்வாலா திட்டம் போன்ற பல்வேறு அரசுத் திட்டங்களின் பயனாளிகள் இதில் அடங்குவர்.
------
AD/SV/KPG/SS
(Release ID: 2156041)