வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
प्रविष्टि तिथि:
12 AUG 2025 11:47AM by PIB Chennai
புத்தொழில் நிறுவனங்களுக்காக ஹீரோ என்ற புதுமைக் கண்டுபிடிப்புக்காக விரைவுப்படுத்துதல் திட்டத்தின் மூலம் தொடக்க கால புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு ஆதரவளிக்க ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
புத்தொழில் இந்தியா முன்முயற்சியின் கீழ், தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் இணைந்து எதிர்கால போக்குவரத்து, தூய்மை தொழில்நுட்பம், நவீன தொழில்நுட்பம் ஆகிய தொடர்புடைய துறைகளில் பணியாற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும்.
இந்த கூட்டாண்மை, தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு ஜெர்மனி மற்றும் இந்தியாவில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகள், நிறுவனத்தின் விரிவான விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் கூட்டாளர்களின் கட்டமைப்பு மற்றும் வழிகாட்டுதலுக்கான சிறப்பு அணுகலை வழங்கும்.
இந்நிகழ்ச்சியில் பேசிய தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை இணைச் செயலாளர் திரு சஞ்சீவ், ஹீரோ மோட்டோகார்ப் உடனான கூட்டாண்மை, இந்தியாவின் போக்குவரத்து சவால்களுக்குத் தீர்வு காணும் உற்பத்தி சார்ந்த புத்தொழில் நிறுவனங்களை இயக்குவதில் தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2155373
***
(Release ID: 2155373)
AD/IR/SG/RJ
(रिलीज़ आईडी: 2155468)
आगंतुक पटल : 17