பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடந்த 2024-25-ம் நிதியாண்டில் மறைந்த முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் 5,500 பேருக்கு உரிய உதவித்தொகைகள் வழங்கப்பட்டது

Posted On: 11 AUG 2025 4:42PM by PIB Chennai

மறைந்த முன்னாள் படை வீரர்களின் மனைவி, குழந்தைகளுக்காக  ஆண்டுதோறும் வழங்கப்படும் பிரதமரின் உதவித் திட்டத்தின் கீழ் தற்போது 5,500 பேருக்கு புதிதாக உதவித்தொகைகள் (தலா 2750 சிறுவர்கள், சிறுமிகள்) வழங்கப்பட்டுள்ளன.

2020-2021-ம் நிதியாண்டு முதல் 2024-2025-ம் நிதியாண்டு வரை புதிதாக 13,739 பேருக்கு உதவித் தொகைகள் வழங்கப்பட்டது. 23,457 பேருக்கு உதவித் தொகைகள் புதுப்பிக்கப்பட்டது.

2019-2020-ம் நிதியாண்டில் 5500 உதவித் தொகைகள் வழங்கப்பட்டன. இதில் சிறுவர்களுக்கு ரூ.30,000, சிறுமிகளுக்கு ரூ.36,000-ம் அளிக்கப்பட்டது.

இத்தகவலை  பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத், மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று (11 ஆகஸ்ட் 2025) எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

***

(Release ID: 2155069)
AD/IR/AG/SG


(Release ID: 2155212)
Read this release in: Urdu , English , Hindi