பாதுகாப்பு அமைச்சகம்
சிங்கப்பூரின் சாங்கி கடற்படை தளத்திற்கு சென்றடைந்தது ஐஎன்எஸ் சந்தயக்
Posted On:
09 AUG 2025 6:50PM by PIB Chennai
அதிநவீன ஹைட்ரோகிராஃபி (பெருங்கடல்கள், கடல்கள், ஏரிகள், ஆறுகள் போன்ற நீர்ப் பரப்புகளைப் பற்றிய அறிவியல் மற்றும் அளவீட்டுத்) திறன் கொண்ட முதல் இந்திய கடற்படைக் கப்பலான சந்தயக், சிங்கப்பூரின் தேசிய தினமான ஆகஸ்ட் 09, 25 அன்று மூன்று நாள் பயணமாக சாங்கி கடற்படைத் தளத்திற்கு சென்றடைந்தது. இந்தப் பயணம், பிராந்திய கடல்சார் ஒத்துழைப்புக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. மேலும், இந்திய கடற்படைக்கும் சிங்கப்பூரின் கடல்சார் நிறுவனங்களுக்கும் இடையிலான இருதரப்பு நீராய்வியல் உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது.
பிராந்திய நீராய்வியல் திறன் மேம்பாட்டில் இந்தியாவின் வளர்ந்து வரும் தலைமையையும் இந்தப் பயணம் நிரூபிக்கிறது.
ஐஎன்எஸ் சந்தயக் பிப்ரவரி 2024 -ல் பாதுகாப்புத் துறை அமைச்சர் முன்னிலையில் இயக்கி வைக்கப்பட்டது. இந்தக் கப்பல் முழு அளவிலான கடலோர மற்றும் ஆழமான நீர் ஆய்வுத் திறனைக் கொண்டுள்ளது. ஹெலிகாப்டர் மற்றும் மருத்துவமனை செயல்பாடுகளுடன் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது.
சிங்கப்பூருக்கான இந்தக் கப்பலின் முதல் வருகை, தொழில்நுட்ப/தொழில்முறை பரிமாற்றங்கள் மற்றும் நிலையான ஆதரவு ஈடுபாடுகளை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் பயணத்தின் போது முக்கிய நடவடிக்கைகளில் சிங்கப்பூரின் உதவித் தலைமை நீர்வரைவியல் நிபுணர் திரு. கேரி சியூவைச் சந்திப்பதும், ராயல் சிங்கப்பூர் கடற்படையின் 9வது கடற்படைத் தளபதி கர்னல் சௌவா மெங் சூனை மரியாதை நிமித்தமாக சந்திப்பதும் அடங்கும்.
****
(Release ID: 2154707)
AD/SM/PKV/SG
(Release ID: 2154740)