ஜவுளித்துறை அமைச்சகம்
இயற்கை மூலப் பொருட்களால் ஆன இந்திய ஜவுளிகளை சர்வதேச அளவில் சந்தைப்படுத்த மத்திய அரசின் முன் முயற்சிகள்: மத்திய அமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா
प्रविष्टि तिथि:
08 AUG 2025 2:33PM by PIB Chennai
இயற்கை மூலப் பொருட்களால் ஆன ஜவுளிகள் மற்றும் இயற்கை வண்ண ஆடைகளை ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது:
தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 'மெகா கிளஸ்டர் மேம்பாட்டுத் திட்டம்' மற்றும் 'தேவை அடிப்படையிலான சிறப்பு உள்கட்டமைப்புத் திட்டங்கள்' என்ற இரண்டு திட்டங்கள் மூலம், மாநில அரசுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றவுடன், இயற்கை வடிவிலான / தாவர சாயங்களை மேம்படுத்துவதற்கும் சாயமிடும் நிறுவனங்களை அமைப்பதற்கும் அரசு நிதி உதவி வழங்குகிறது.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இயற்கை சாயங்கள் தொடர்பான 3 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஜவுளி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
முற்றிலும் குறைபாடுகளற்ற மற்றும் சுற்றுச்சூழலில் விளைவுகளை ஏற்படுத்தாத உயர்தர கைத்தறிப் பொருட்களை பிராண்டிங் செய்வதற்காக ஜவுளி அமைச்சகம் இந்திய கைத்தறி பிராண்ட் (IHB) முயற்சியைத் தொடங்கியுள்ளது. ஜவுளி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பான ஜவுளிக் குழு, இந்த பிராண்டின் கீழ், இயற்கை சாயங்களைப் பயன்படுத்தும் பொருட்களைப் பதிவுசெய்து அதன் சந்தைப்படுத்தலுக்கு உதவுகிறது.
வேளாண் மதிப்புச் சங்கிலியில் நிலைத்தன்மை மற்றும் மதிப்பு கூட்டல் குறித்த ஒரு திட்டம் அமைச்சகத்தால் வழிநடத்தப்படுகிறது, இது இந்தியாவில் இயற்கைப் பருத்தியின் விநியோகத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது மற்றும் சர்வதேச பிராண்டுகளுடன் சந்தை இணைப்புகளை எளிதாக்குகிறது.
இயற்கை பருத்தி உற்பத்திக்கான நடைமுறைகளை மேம்படுத்துதல், வணிக சாகுபடிக்காக இயற்கையாகவே வண்ணம் பூசப்பட்ட பருத்தியின் விதை வகைகளை வெளியிடுதல் மற்றும் இயற்கை வண்ணம் பூசப்பட்ட பருத்தியின் உற்பத்தியை அதிகரிப்பது போன்ற பல கூட்டு முயற்சிகளை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் கீழ் உள்ள மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
பாரத் டெக்ஸ் 2025 கண்காட்சியில், எருக்கு அல்லது பாலைச் செடி, பருத்தி உள்ளிட்ட இயற்கை இழைகள் மற்றும் இயற்கை சாயங்களின் காட்சிப்படுத்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவற்றின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் செய்யப்பட்டது.
இந்தத் தகவலை ஜவுளித்துறை அமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா இன்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் வழங்கினார்.
***
(Release ID: 2154074)
VL/SM/SG
(रिलीज़ आईडी: 2154247)
आगंतुक पटल : 13