ஜவுளித்துறை அமைச்சகம்
பணிமனைகளை நிர்மாணிப்பதற்காக மகளிர்கைத்தறி நெசவாளர்களுக்கு 100% மானியம்வழங்கப்படும்
Posted On:
08 AUG 2025 2:35PM by PIB Chennai
கைத்தறியை ஊக்குவிப்பதற்கும், மகளிர்நெசவாளர்கள் உட்பட நாடு முழுவதும் கைத்தறி நெசவாளர்களின் நலனுக்காகவும் (i) தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் (ii) மூலப்பொருள் விநியோகத் திட்டம் போன்ற மத்தியத் துறை திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களின் கீழ், தகுதியுள்ள கைத்தறி நிறுவனங்கள்/நெசவாளர்களுக்கு மூலப்பொருட்கள், மேம்படுத்தப்பட்ட தறிகள் மற்றும் துணைக்கருவிகள் கொள்முதல், சூரிய ஒளி அலகுகள், பணிமனை கட்டுமானம், திறன் மேம்பாடு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான சமர்த் பயிற்சி, தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு மேம்பாடு, தொழில்நுட்ப மற்றும் பொதுவான உள்கட்டமைப்புஆகியவசதிகள்வழங்கப்படுகின்றன.
தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காக உள்நாட்டு/வெளிநாட்டு சந்தைகளில் கைத்தறி பொருட்களை சந்தைப்படுத்துதல், நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் கடன்கள், சமூகப் பாதுகாப்பு, விருது பெற்ற நெசவாளர்களுக்கு தேவை அடிப்படையிலான நிதி உதவி, கைத்தறி தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை போன்றவையும் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டங்களின் கீழ் மகளிர்கைத்தறி நெசவாளர்களுக்கு தனியாகசிறப்புஏற்பாடு எதுவும் இல்லை. இருப்பினும், தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பணிமனைகளை நிர்மாணிப்பதற்காக மகளிர்கைத்தறி நெசவாளர்களுக்கு 100% மானியம் வழங்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 2022-23 முதல் 2024-25 வரையிலானநிதியாண்டில்சமர்த் திட்டத்தின் கீழ் திறன்பெற்றமகளிர்கைத்தறி நெசவாளர்கள்தமிழகத்தில்மொத்தம் 1027 பேர். நாடுமுழுவதும்ஒட்டுமொத்தமாக 14,177 பேர்திறன்பெற்றுள்ளனர்.
மாநிலங்களவையில் இன்று ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ஜவுளித்துறை அமைச்சர் திருமதி பபித்ரா மார்கெரிட்டா இந்தத் தகவலை வழங்கினார்.
****
(Release ID: 2154076)
VL/SM/SG
(Release ID: 2154210)