பாதுகாப்பு அமைச்சகம்
சைபர்ஸ்பேஸ் செயல்பாடுகள் மற்றும் கடல் வழி தாக்குதல் நடவடிக்கைகளுக்கான கூட்டுக் கோட்பாடுகளின் வகைப்படுத்தப்படாத பதிப்புகளை பாதுகாப்புப் படைத் தலைமை அதிகாரி முறையாக வெளியிட்டார்
Posted On:
07 AUG 2025 4:24PM by PIB Chennai
புதுதில்லியில் ஆகஸ்ட் 07, 2025 அன்று நடந்த தலைமைப் பணியாளர்கள் குழு கூட்டத்தின் போது, பாதுகாப்புப் படைத் தலைமை அதிகாரி (CDS) ஜெனரல் அனில் சவுகான் மற்றும் இராணுவ விவகாரத் துறை செயலாளர் ஆகிய இருவரும் சைபர்ஸ்பேஸ் (இணையவெளி) செயல்பாடுகள் மற்றும் கடற்படை மற்றும் தரையிறங்கும் படைகளால் கடலில் இருந்து தொடங்கப்படும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கான கூட்டுக் கோட்பாடுகள் பற்றிய பதிப்புகளை முறையாக வெளிப்படுத்தினர். இந்தக் கோட்பாடுகள் பற்றிய தகவல்களை வெளிப்படையாக தெரிவித்தல் என்பது கூட்டுப் போர் நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல்கள் குறித்த கருத்துரு வெளிப்படையானதாக, அனைவரும் அணுகக் கூடியதாக, பரந்துபட்ட அளவில் தகவல் அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
சைபர்ஸ்பேஸ் செயல்பாடுகளுக்கான கூட்டுக் கோட்பாடு, தேசிய இணையவெளி நலன்களைப் பாதுகாக்க, தாக்குதல் மற்றும் தற்காப்பு சைபர் திறன்களை ஒருங்கிணைத்து, மூன்று சேவைகளிலும் ஒத்திசைக்கப்பட்ட செயல்பாடுகளை செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை கோடிட்டுக் காட்டுகிறது. இது அச்சுறுத்தல் குறித்த தகவலுக்கு பிந்தைய திட்டமிடல், எதிர் திறன் உருவாக்கம், நிகழ்நேர உளவுத்துறை ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டு சைபர் திறன்களின் மேம்பாட்டை வலியுறுத்துகிறது.
கடற்படை மற்றும் தரையிறங்கும் படைகளால் கடலில் இருந்து தொடங்கப்படும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கான கூட்டுக் கோட்பாடு, கடல்சார், வான் மற்றும் நிலப் படைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் இத்தகைய நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கும் செயல்படுத்துவதற்கும் கட்டமைப்பை வரையறுக்கிறது. இது ஒருங்கிணைந்த தன்மை, விரைவான எதிர் திறன் மற்றும் கரையில் நடவடிக்கைகளை திறம்பட்டதாக ஆக்க கூட்டுப் படை பயன்பாடு ஆகியவற்றை வலியுறுத்துகிறது.
இராணுவ விண்வெளி நடவடிக்கைகள், சிறப்புப் படை நடவடிக்கைகள், வான்வழி/ஹெலிபோர்ன் நடவடிக்கைகள், ஒருங்கிணைந்த தளவாடங்கள், பல கள நடவடிக்கைகள் போன்ற சமகால மற்றும் போர் / தாக்குதலின் முக்கிய பகுதிகளை உள்ளடக்கிய ஏராளமான புதிய கோட்பாடுகள் / முதன்மை அம்சங்களை உருவாக்க பாதுகாப்புப் படைத் தலைமை தொடங்கியுள்ளது. இந்தக் கோட்பாடுகள் தொடர்புடையவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு கூட்டு இராணுவ நடவடிக்கைகளை திறம்பட திட்டமிடுவதற்கும் சுமூகமாக செயல்படுத்துவதற்கும் பொதுவான விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கும். கூட்டுக் கோட்பாடுகளை https://ids.nic.in/content/doctrines இல் அணுகலாம்.
***
(Release ID: 2153626)
AD/SM/DL
(Release ID: 2153832)