தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகர்ப்புற பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகளின் விரிவாக்கப் பணிகள்
இடுகை இடப்பட்ட நாள்:
07 AUG 2025 3:19PM by PIB Chennai
தொலைதூரப் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் தொலைத்தொடர்பு சேவைக்கான இணைப்பை அதிகரிக்கும் வகையில், டிஜிட்டல் பாரத் நிதி மூலம் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகளில் மொபைல் சேவைக்கான தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டம், நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் முன்னேற விரும்பும் மாவட்டங்களில் மொபைல் சேவைகளை வழங்குவதற்கான திட்டம், தொலைத்தொடர்பு சேவைகள் கிடைக்காத தொலைதூரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் 4ஜி மொபைல் சேவைகளை வழங்குவதற்கான திட்டம், கிராம பஞ்சாயத்துகள் மற்றும் இதர ஊரகப் பகுதிகளில் அகண்ட அலைவரிசைக்கான இணைப்பை வழங்குவதற்கான திருத்தியமைக்கப்பட்ட பாரத்நெட் திட்டம் ஆகியவை இதில் அடங்கும்.
கூடுதலாக, நாடு முழுவதும் 5ஜி மொபைல் சேவைகளை அதிகரிக்கும் வகையில் பயனாளர்களுக்கு குறைந்த செலவில் மொபைல் சேவைகளை வழங்குவதற்கு ஏதுவாக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திரு பெம்மசாணி சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2153523)
AD/SM/SV/SG/KR/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2153761)
வருகையாளர் எண்ணிக்கை : 11