மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மீன்வள உள்கட்டமைப்பு வசதிகள்
Posted On:
06 AUG 2025 3:23PM by PIB Chennai
மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின்கீழ் உள்ள மீன்வளத் துறையானது பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் ஏனைய இறுதிநிலை அமலாக்க முகமைகள் ஆகியவற்றிடம் இருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் ரூ.21,274.16 கோடி மதிப்பிலான மீன்வள அபிவிருத்தி செயல்திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.9,189.79 கோடி ஆகும். இத்திட்டத்தின்கீழ் 115615.80 லட்சம் ரூபாய் மொத்த மதிப்பீட்டில் தமிழ்நாட்டில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.44865.07 லட்சங்கள் ஆகும். இதேபோன்று புதுச்சேரிக்கு ரூ.35230.01 லட்சம் மதிப்பீட்டில் செயல்திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதில் ரூ.29176 லட்சம் மத்திய அரசின் பங்காகும்.
ஒருங்கிணைந்த நீர்ப்பூங்காக்கள் பலவகையான மீன் வளங்களுக்கான மையமாக செயல்படுகின்றன. ஆரம்பம் முதல் இறுதி வரையிலான மீன்வள பதப்படுத்துதல் உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதன் மூலம் மீன்வளத்திற்கான மதிப்புக்கூட்டல் சங்கிலியை வலுப்படுத்துவதாக இந்த நீர்ப்பூங்காக்கள் அமைந்துள்ளன. இவை தொகுப்பிட அடிப்படையில் செயல்படுவதோடு அறுவடைக்குப் பின்பான இழப்புகளை குறைக்கவும் மதிப்புக்கூட்டல் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் உதவுகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் அதாவது 2020-21 நிதியாண்டு முதல் 2024-25 நிதியாண்டு வரை மீன்வளத் துறையானது நாட்டில் ரூ.682.60 கோடி செலவில் மொத்தமாக 11 ஒருங்கிணைந்த நீர்ப்பூங்காக்கள் அமைக்க அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் ரூ.12771 லட்சம் செலவில் ஒரு நீர்ப்பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.7516 லட்சம் ஆகும்.
இத்தகவலை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் இன்று மாநிலங்களவையில் ஒரு எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்தார்.
***
(Release ID: 2152972)
AD/TS/DL
(Release ID: 2153382)