மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
நடப்பு நிதியாண்டில் சுமார் 37,793 புதிய பால் உற்பத்தியாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சுமார் 1804 பால் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன
Posted On:
05 AUG 2025 2:56PM by PIB Chennai
பால் மற்றும் பால் பொருட்களின் தரத்தை மேம்படுத்தவும், கொள்முதல், பதப்படுத்துதல், மதிப்பு கூட்டல் மற்றும் சந்தைப்படுத்துதலின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையிலும் நாடு முழுவதும் 2014-15-ம் ஆண்டு முதல் தேசிய பால்வள திட்டத்தை கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமல்படுத்தி வருகிறது. மாநில கூட்டுறவு பால் கூட்டமைப்புகள், யூனியன்கள், உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய அனைத்து பால் உற்பத்தியாளர்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
தேசிய பால்வளத் திட்டத்தின் கீழ், 17.63 லட்சம் கூடுதல் பால் உற்பத்தியாளர் சேர்க்கை மற்றும் நாளொன்றுக்கு 120.68 லட்சம் கிலோகிராம் பால் கொள்முதல் அதிகரிப்புடன் சுமார் 31,908 பால் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
2025-26-ம் நிதியாண்டில் சுமார் 37,793 புதிய பால் உற்பத்தியாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சுமார் 1804 பால் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேசிய பால்வளத் திட்டத்தின் கீழ், சுமார் 61,677 கிராம அளவிலான பால் பரிசோதனை ஆய்வகங்கள், 149.35 லட்சம் லிட்டர் குளிர்விக்கும் திறன் கொண்ட 5,995 மொத்த பால் குளிர்சாதனப் பெட்டிகள் நிறுவப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 1278 பால் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. கூடுதலாக 87,072 விவசாயிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இத்தகவலை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் பேராசிரியர் எஸ் பி சிங் பாகல் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2152462)
AD/IR/AG/KR
(Release ID: 2152608)