பாதுகாப்பு அமைச்சகம்
கூட்டுப்போர் முறைகள் ஆய்வுகள் மையம் தனது முதல் வருடாந்தர சொற்பொழிவு நிகழ்ச்சியை தில்லியில் நடத்துகிறது
Posted On:
04 AUG 2025 4:37PM by PIB Chennai
தனது நிறுவன தினத்தைக் குறிக்கும் வகையில், கூட்டுப்போர் முறைகள் ஆய்வு மையமானது ஆகஸ்ட் 05, 2025 அன்று தில்லி கண்டோன்மென்ட்டில் உள்ள மானெக்ஷா மையத்தில் முதல் வருடாந்திர ட்ரைடென்ட் சொற்பொழிவுத் தொடரைத் நடத்துகிறது.. 'எதிர்காலப் போர்க்களத்தில் ஆதிக்கம் செலுத்துதல்' என்ற கருப்பொருளில், முப்படைகளின் தலைமைத் தளபதி திரு. அனில் சவுகான் தொடக்கச் சொற்பொழிவை ஆற்றவுள்ளார். போர்களின் வளர்ந்து வரும் தன்மை, தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் அதிகரித்துவரும் உத்திசார் போட்டிச் சூழலில் தடையற்ற கூட்டு படை ஒருங்கிணைப்புக்கான அவசியம் ஆகியவை குறித்த விவாதங்களுக்கு ஏற்ற பின்னணியை அவரது உரை எடுத்துரைக்கும்.
படைகளின் ஒருங்கிணைப்பு, நவீனமயமாக்கல் மற்றும் ஒருங்கிணைந்த கோட்பாடுகள் குறித்த அவரது தொலைநோக்குப் பார்வை இன்றும் பொருத்தமாக இருக்கும் சூழலில் இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமைத் தளபதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 'மனித-ஆளில்லா குழு' குறித்த 'ஜெனரல் பிபின் ராவத் இதழ் வெளியீடு இந்த நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக இருக்கும். ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணியாளர்களின் துணைத் தலைமை அலுவலரால் எதிர்காலப் போர்க்களத்தில் இந்திய பாரம்பரிய அரசாண்மையை ஊக்குவிப்பது என்ற தலைப்பிலும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஊழியர்களின் தலைமை அலுவலரால் முத்தரப்பு சேவைகளில் சீர்திருத்தங்களுக்கான அவசரத் தேவை என்ற தலைப்பிலும் சொற்பொழிவுகள் நிகழும். மேலும் பல்வேறு தலைப்புகளில் மூத்த இராணுவத் தலைமை அலுவலர்களின் உரைகளும் இந்த சொற்பொழிவுத் தொடரில் இடம்பெறும்.
***
(Release ID: 2152132)
AD/TS/DL
(Release ID: 2152301)