தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளத்தில் 48 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர்

Posted On: 04 AUG 2025 5:06PM by PIB Chennai

தனியார் மற்றும் அரசுத்துறைகளின் வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்கள், நேரடி மற்றும் இணையவழி மூலம் வேலைவாய்ப்பு கண்காட்சிகள் குறித்த தகவல்கள், வேலைவாய்ப்பு குறித்த கலந்தாய்வு, தொழில் பயிற்சி குறித்த வழிகாட்டுதல், திறன் மேம்பாட்டு படிப்புகள் குறித்த தகவல் உள்ளிட்ட வேலைவாய்ப்பு தொடர்பான சேவைகளை www.ncs.gov.in என்ற மின்னணு தளம் வாயிலாக தேசிய வேலைவாய்ப்பு சேவை இணைய தளம் அளித்து வருகிறது. இந்த இணைய தளம் தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது.  தேவையின் அடிப்படையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது.

தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளத்தில் 14.07.2025 வரை 6.43 கோடிக்கும் (அரசு, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்) அதிகமான காலிப் பணியிடங்கள் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளன. இதற்காக இந்த இணையதளத்தில் 1182-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு ஆலோசகர்கள் இடம் பெற்றனர். இதுவரை நேரடி மற்றும் இணையதளம் வாயிலாக 41 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு வழிகாட்டி அமர்வுகள் நடைபெற்றுள்ளன.

10.07.2025 வரை தேசிய வேலைவாய்ப்பு சேவை இணைய தளத்தில் 48 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர். இத்தகவலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்தலஜே மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார். 

***

(Release ID: 2152151)
AD/IR/AG/
DL


(Release ID: 2152277)
Read this release in: English , Urdu , Hindi