தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அமிர்தசரஸ் நகரத்தில் நெட்வொர்க் தரம் குறித்து டிராய் மதிப்பீடு செய்துள்ளது

Posted On: 04 AUG 2025 12:17PM by PIB Chennai

இந்திய தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் ஜூன் 2025 மாதத்தில்  பஞ்சாப் உரிமச் சேவை பகுதியில் நகர வழித்தடங்களில்  மேற்கொண்ட தனது தனிப்பட்ட இயக்கி ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.  நகர்ப்புற மண்டலங்கள், நிறுவன ஹாட்ஸ்பாட்கள், பொதுப்போக்குவரத்து மையங்கள் மற்றும் அதிவேக வழித்தடங்கள் போன்ற பல்வேறு பயன்பாட்டுச் சூழல்களில் நிகழ் நேர மொபைல் நெட்வொர்க் செயல்திறனைக் கண்டறிவதற்காக இந்த ஆய்வை தில்லியில் உள்ள டிராய் மண்டல அலுவலகம் நடத்தியிருந்தது.

ட்ராய் குழுக்கள் 17 ஜூன் 2025 முதல் 20 ஜூன் 2025 வரை 343.1 கிலோமீட்டர் தூரத்துக்கு நகரத்தில் பரிசோதனையை மேற்கொண்டன. பல்வேறு மொபைல் போன்களில் பல்வேறு சேவைகளின் 2ஜி, 3ஜி, 4ஜி மற்றும் 5ஜி அனுபவங்களை மதிப்பிடும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குரல் சேவைகள், இணைய தரவு சேவைகள் ஆகிய இரு சேவைகளிலும் வெற்றி விகிதம் கணக்கிடப்பட்டுள்ளது. அமிர்தசரஸ் நகரத்திலும் அருகில் உள்ள மக்கள்தொகை அதிகம் உள்ள பகுதிகளிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தானாகவே தேர்ந்தெடுக்கும் முறையில் அழைப்பு வெற்றி விகிதம் ஏர்டெல்லுக்கு 99.31%, பி.எஸ்.என்.எல்.லுக்கு 98.10%, ஆர்.ஜெ.ஐ.எல்.லுக்கு 99.83% மற்றும் விஐஎல்-லுக்கு 98.10% ஆகவுள்ளது. அதேபோல் அழைப்பு துண்டிப்பு விகிதம் ஏர்டெல்லுக்கு 0.00%, பி.எஸ்.என்.எல்.லுக்கு 3.51%, ஆர்.ஜெ.ஐ.எல்.லுக்கு 0.17% மற்றும் விஐஎல்-லுக்கு 0.00% ஆகவுள்ளது.

ஒட்டுமொத்த தரவு பதிவேற்ற செயல்திறன் என்ற காரணியில் ஏர்டெல் நிறுவனத்தின் சராசரி பதிவேற்ற வேகம் (5ஜி/4ஜி) வினாடிக்கு 31.90 எம்பி (ஒரு வினாடிக்கு மெகாபைட்டுகள்), பிஎஸ்என்எல் (4ஜி/3ஜி/2ஜி) வினாடிக்கு 3.45 எம்பி, ஆர்ஜெஐஎல் (5ஜி/4ஜி) வினாடிக்கு 33.48 எம்பி மற்றும் விஐஎல் (4ஜி/2ஜி) வினாடிக்கு 11.19 எம்பி ஆகும்.

ஒட்டுமொத்த தரவு பதிவிறக்க செயல்திறன் என்ற காரணியில்  ஏர்டெல் நிறுவனத்தின் சராசரி பதிவிறக்க வேகம் (5ஜி/4ஜி) வினாடிக்கு 237.99 எம்பி, பிஎஸ்என்எல் (4ஜி/3ஜி/2ஜி) வினாடிக்கு 3.78 எம்பி, ஆர்ஜெஐஎல் (5ஜி/4ஜி) வினாடிக்கு 267.63 எம்பி மற்றும் விஐஎல் (4ஜி/2ஜி) வினாடிக்கு 28.19 எம்பி ஆகும்.

விரிவான ஆய்வறிக்கையை  www.trai.gov.in. என்ற வலைத்தளத்தில் பார்க்கலாம். கூடுதல் விவரங்கள்/சந்தேகங்களுக்கு ட்ராய் ஆலோசகர் திரு விவேக் காரெவை email: adv.ca@trai.gov.in என்ற இமெயிலிலும்  +91-11-20907772 என்ற தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.

***

(Release ID: 2152037)

AD/TS/KR

 


(Release ID: 2152104)
Read this release in: English , Urdu , Hindi