தேசிய மனித உரிமைகள் ஆணையம்
நித்தி ஆயோக், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வு அமைச்சகம் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு சங்கலா அறக்கட்டளை ”இந்தியாவில் முதுமையடைதல்: உருவாகி வரும் யதார்த்தங்களும் பதில்வினைகளும்” என்ற ஒருநாள் தேசியக் கருத்தரங்கை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் உதவி
Posted On:
02 AUG 2025 2:22PM by PIB Chennai
தேசிய மனித உரிமைகள் ஆணையமானது நித்தி ஆயோக், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வு அமைச்சகம் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு சங்கலா அறக்கட்டளை ”இந்தியாவில் முதுமையடைதல்: உருவாகி வரும் யதார்த்தங்களும் பதில்வினைகளும்” என்ற ஒருநாள் தேசியக் கருத்தரங்கை நடத்த உதவியது. இந்தக் கருத்தரங்கம் நேற்று புதுதில்லியில் நடைபெற்றது. மூத்தக்குடிமக்களின் கண்ணியத்தையும் உரிமைகளையும் பாதுகாத்தல், முதுமை அடைதலை ஒரு வாய்ப்பாக மறுவரையறை செய்தல் ஆகியவற்றில் கருத்தரங்கம் கவனம் செலுத்தி இருந்தது. இந்தியாவில் மக்கள் முதுமை அடைவதில் ஏற்படும் சவால்களும் வாய்ப்புகளும் குறித்த புத்தாக்கமான கொள்கைகளை உருவாக்குதல் தொடர்புடைய பங்குதாரர்களுக்கிடையே உடையாடலை ஊக்குவித்தல் மற்றும் சிறந்த நடைமுறைகளை பகிர்தல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்பட்டது.
தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீ்திபதி திரு வி.ராமசுப்ரமணியன் தனது துவக்கவுரையில் முதியவர்களை பராமரித்தல் மற்றும் மரியாதை செய்தல் என்பதை அடிப்படை சமுதாய மதிப்பாக எடுத்துக்கொள்ளும் செறிவான கலாச்சாரப் பாரம்பரியத்தை இந்தியா கொண்டுள்ளதாக தெரிவித்தார். மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டுமென்ற தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் கோட்பாட்டிற்கு இணங்க மூத்த குடிமக்களின் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றை உறுதி செய்கின்ற நவீன கொள்கைகளுடன் பண்டைய மதிப்பீடுகளையும் ஒருங்கிணைக்க வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார்.
நிதி ஆயோக்கின் உறுப்பினர் டாக்டர் வினோத் கே.பால் தனது சிறப்புரையில் முதுமை அடைந்து வரும் மக்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பின் இன்றியமையாமையை வலியுறுத்தினார்.
தேசிய மனித உரிமைகள் ஆணைய பொதுச் செயலாளர் திரு பாரத் லால் தனது உரையில் 2050 ஆம் ஆண்டில் இந்தியாவில் 35 கோடி மூத்த குடிமக்கள் இருப்பார்கள் என்றும் அப்போது ஐந்தில் ஒரு இந்தியர் முதியோராக இருப்பார் என்றும் தெரிவித்தார்.
சங்கலா அறக்கட்டளை இயக்குனர் திரு தேவேந்திர குமார் நிம், கருத்தரங்கின் நோக்கங்களை எடுத்துரைத்தார்.
இதில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சக செயலாளர் திரு அமித் யாதவ், புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் டாக்டர் கிரண் பேடி உள்ளிட்டோர் உரையாற்றினர்.
அர்த்தமுள்ள பங்களிப்புகளைத் தொடர்ச்சியாக மூத்த குடிமக்கள் வழங்கி வரும் வகையில் வாய்ப்புகள் அவர்களுக்குத் தரப்பட வேண்டும், கேரளாவின் வலி தணிவிப்பு பராமரிப்பு முறை போன்ற மாதிரிகளை உருவாக்குதல், முதியோர்களுக்கு நிதி பாதுகாப்பு, டிஜிட்டல் அடிப்படை அறிவு, காப்பீடு ஆகியன கிடைக்கச் செய்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கருத்தரங்கில் முடிவெடுக்கப்பட்டது.
***
(Release ID: 2151703)
AD/TS/ RJ
(Release ID: 2151870)