வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
பெங்களூருவில் முதலீட்டாளர்கள் வட்டமேசைக் கூட்டம் நடைபெற்றது
முதலீடுகளையும் தொழில்மயமாக்கலையும் அதிகரிக்க மத்திய-மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பு அவசியம்: டிபிஐஐடி செயலாளர்
प्रविष्टि तिथि:
02 AUG 2025 6:39PM by PIB Chennai
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையான டிபிஐஐடி-யின் செயலாளர் திரு அமர்தீப் சிங் பாட்டியா தலைமையில் பெங்களூருவில் உயர்மட்ட முதலீட்டாளர்கள் வட்டமேசை கூட்டம் நடைபெற்றது. 2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தேசிய தொழில்துறை வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் (NICDP) கீழ் தென் பகுதி தொழில்துறை முனையங்ககளின் திறனை வெளிப்படுத்தவும், தொழில்துறை வளர்ச்சிக்கான மத்திய-மாநில ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இது ஒரு தளமாக செயல்பட்டது.
மூத்த டிபிஐஐடி அதிகாரிகள், தொழில் துறையில் தேசிய முயற்சிகள் குறித்த புதிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர், இவை சீர்திருத்தங்களை செயல்படுத்தி முதலீட்டாளர் நம்பிக்கையை வலுப்படுத்துகின்றன என அவர்கள் கூறினர்.
இந்த வட்டமேசைக் கூட்டத்தில் சிஐஐ, ஃபிக்கி, அசோச்சம் உள்ளிட்ட முக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. தொழில்துறை பிரதிநிதிகள், குறு, சிறு, நடுத்த நிறுவன பிரதிநிதிகள், புத்தொழில் நிறுவனத்தினர் போன்றோர் கலந்துரையாடலில் ஈடுபட்டு வாய்ப்புகளை ஆராய்ந்தனர்.
நிகழ்வின் ஒரு பகுதியாக, பிடிஐஐடி செயலாளர் திரு அமர்தீப் சிங் பாட்டியா தென் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளுடன் உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார். தொழில்துறை வளர்ச்சியை விரைவுபடுத்துதல், மாநிலக் கொள்கைகளை தேசிய நோக்கங்களுடன் இணைப்பது, முதலீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு உருவாக்கத்தை விரைவுபடுத்துவதற்கான முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவை குறித்து விவாதங்கள் நடைபெற்றன. தொழில்மயமாக்கலை விரைவுபடுத்தவும் உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கவும் வலுவான மத்திய-மாநில அரசுகளின் ஒத்துழைப்பை டிபிஐஐடி செயலாளர் வலியுறுத்தினார்.
***
(Release ID: 2151806)
AD/PLM/RJ
(रिलीज़ आईडी: 2151863)
आगंतुक पटल : 9