சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

பாலிப்ரொப்பிலீன் பொருட்களை உருவாக்கல் & வெளிவிடுதல் முறையில் தயாரிக்கும் தொழில்துறையின் தரக்கட்டுப்பாட்டு பணியாளர்களுக்கு இந்திய தரநிர்ணய அமைவனம் சார்பில் கேப்ஸ்யூல் பயிற்சி நடத்தப்பட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 01 AUG 2025 7:05PM by PIB Chennai

இந்திய அரசின் நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தரநிர்ணய அமைவனம் (BIS), தனது இருமாதத்திற்கொரு முறை நடைபெறும் தரக் கட்டுப்பாட்டு பணியாளர்களுக்கான கேப்ஸ்யூல் பயிற்சியை ஜூலை 30 மற்றும் 31 ஆம் தேதிகளில், பிஐஎஸ் சென்னை அலுவலகத்தில் நடத்தியது. பாலிப்ரொப்பிலீன் (Polypropylene) பொருட்களை உருவாக்கல் & வெளிவிடுதல் (Moulding & Extrusion) முறையில் தயாரிக்கும் தொழில்துறையின் தரக்கட்டுப்பாட்டு பணியாளர்களுக்கு  இந்த இருநாள் பயிற்சியை   தரநிர்ணய அமைவனம் ஏற்பாடு செய்தது.

தரநிர்ணய அமைவனத்தின் சென்னை கிளையின் தலைவர் திரு எஸ் டி  தயானந்த் வரவேற்புரை நிகழ்த்தி, இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கங்களை எடுத்துரைத்தார்.

இரு நாட்கள் நடைபெற்ற பயிற்சி நிகழ்ச்சியில், இந்திய தரநிலையான ஐஎஸ் 10951-இன் முக்கிய அம்சங்கள் மற்றும் தேவைகளின் முக்கியத்துவம், அவற்றை சோதிக்கும் முறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள, மோட்டார் வாகனத் துறைக்காக தேவைப்படும் பாலிப்ரொப்பிலீன் கலவைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்துறைப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இப்பயிற்சியின் ஒரு பகுதியாக, பங்கேற்பாளர்கள் சென்னையில் உள்ள பிளாஸ்டிக் பொறியியல் & தொழில்நுட்ப மத்திய நிறுவனத்திற்கு  (CIPET) சென்றனர், அங்கு மாதிரிகளின் தயாரித்தல் மற்றும் சோதனை நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.

நிகழ்ச்சியின்  நிறைவில், தரநிர்ணய அமைவனத்தின் தென் மண்டல துணைத் தலைமை  இயக்குனர் டாக்டர் மீனாட்சி கணேசன் மற்றும் ஹால்மார்க்கிங் & பயிற்சியின் துணைத் தலைமை இயக்குனர் திருமதி சித்ரா குப்தா ஆகியோர் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடினர். தரக் கட்டுப்பாட்டு பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  

     

****

AD/SM/RB/SV/KPG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2151615) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English