தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொலைத்தொடர்பு மோசடியைத் தடுக்க குடிமக்கள் கருத்துகளின் அடிப்படையில் 13.6 மில்லியனுக்கும் அதிகமான மொபைல் எண்கள் துண்டிக்கப்பட்டன: மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா நாடாளுமன்றத்தில் தகவல்

Posted On: 30 JUL 2025 4:36PM by PIB Chennai

சஞ்சார் சாத்தி வலைதளம் மூலம் 5 லட்சத்திற்கும் அதிகமான மொபைல் கைபேசிகள் மீட்கப்பட்டன

 

மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா இன்று மக்களவையில் தொலைத்தொடர்பு மோசடிகள் மற்றும் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகியவற்றின் தற்போதைய நிலை தொடர்பான முக்கிய தகவல்களை எடுத்துரைத்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

 

சைபர் மோசடிகளைத் தடுப்பதை மேம்படுத்துவதற்கான அரசின் தொடர் முயற்சிகளை கோடிட்டுக் காட்டிய மத்திய அமைச்சர், சைபர் மோசடியைத் தடுப்பதற்கும் குடிமக்களை டிஜிட்டல் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதற்கும் நாடு தழுவிய முன்முயற்சியின் அடிப்படையில், மத்திய அரசு தொலைத்தொடர்புத் துறை, உள்துறை அமைச்சகத்துடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன், தொடர்ச்சியான தீர்க்கமான, தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவைக்குத் தெரிவித்தார்.

 

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, நிகழ்நேரத்தில் மோசடிகளை கூட்டாகச் சமாளிக்க 570 வங்கிகள், 36 மாநில காவல்துறை, புலனாய்வு நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் உட்பட 620 நிறுவனங்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் புலனாய்வு தளத்தை உருவாக்கியுள்ளதாக கூறினார். குடிமக்களை ஏமாற்ற தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை தவறாகப் பயன்படுத்தும் மோசடி செய்பவர்கள் மற்றும் சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கையை இந்த தளம் செயல்படுத்துகிறது.

 

இந்த பணியில் பொதுமக்களை மேலும் ஈடுபடுத்த, அரசு மே 16, 2023 அன்று சஞ்சார் சாத்தி வலைதளத்தை தொடங்கியது. இது 15.5 கோடிக்கும் அதிகமான வருகைகளைப் பதிவு செய்துள்ளது என்றும் இது வலுவான பொது விழிப்புணர்வு மற்றும் பங்கேற்பைக் குறிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். இந்த வெற்றியின் அடிப்படையில், சஞ்சார் சாத்தி மொபைல் செயலி ஜனவரி 17, 2025 அன்று ஆண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிற்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இது 44 லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளன.

 

இந்த தளங்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம், தொலைத்தொடர்புத் துறை 5.5 லட்சம் கைபேசிகளைத் தடுத்து, மொத்தமாக குறுஞ்செய்திகளை அனுப்பும் 20,000 எண்களை செயலிழக்கச் செய்துள்ளது. சந்தேகத்திற்கிடமான செயல்களில் ஈடுபட்ட கிட்டத்தட்ட 24 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

 

அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய சேவையான "உங்கள் மொபைல் இணைப்புகளை அறிந்து கொள்ளுங்கள்"  பயனர்கள் தங்கள் பெயரில் வழங்கப்பட்ட அனைத்து எண்களையும் சரிபார்த்து, ஏதேனும் அங்கீகரிக்கப்படாத இணைப்புகள் குறித்து புகாரளிக்க அனுமதிக்கிறது. இதன் விளைவாக அத்தகைய 1.36 கோடி எண்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

 

போலி மொபைல் எண்களை தானாகவே கண்டறிந்து அகற்றுவதற்கான, அமைப்பில் அரசாங்கம் செயற்கை நுண்ணறிவு கருவிகளையும் பயன்படுத்தியுள்ளது - இது கூடுதலாக 82 லட்சம் இணைப்புகளைத் துண்டிக்க வழிவகுத்தது. இந்திய அழைப்புகளாகத் தோன்றும் வெளிநாட்டு எண்களைக் கொண்ட  சர்வதேச போலி அழைப்புகளின் கடுமையான சிக்கலை நிவர்த்தி செய்யும் வகையில், தொலைத்தொடர்புத் துறை சர்வதேச உள்வரும் போலி அழைப்புகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு மையப்படுத்தப்பட்ட மென்பொருள் தீர்வை அறிமுகப்படுத்தியது. முதல் நாளிலேயே, இதுபோன்ற 1.35 கோடி ஏமாற்று அழைப்புகள் தடுக்கப்பட்டன. மேலும் தொடர்ச்சியான முயற்சிகள் இதுபோன்ற சம்பவங்களை 97 சதவீதம் குறைத்துள்ளன. இன்று, முந்தைய மிகப்பெரிய எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, தினமும் சுமார் மூன்று லட்சம் ஏமாற்று அழைப்புகள் மட்டுமே கண்டறியப்படுகின்றன. அதிக பயனர் வெளிப்படைத்தன்மைக்காக, இதுபோன்ற அனைத்து உள்வரும் எண்களிலும் "சர்வதேச அழைப்பு" எச்சரிக்கைகளைக் காட்ட தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

கூடுதலாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து செயல்படும் இந்திய சிம்களை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக DoT உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதுபோன்ற 26 லட்சத்திற்கும் மேற்பட்ட ரோமிங் மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும் இதுபோன்ற மோசடிகளில் பயன்படுத்தப்படும் சுமார் 1.3 லட்சம் சாதனங்கள் தடுக்கப்பட்டுள்ளன.

 

குடிமக்களைப் பாதுகாப்பதற்கும், தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளைப் பாதுகாப்பதற்கும், டிஜிட்டல் முறையில் பாதுகாப்பான இந்தியாவை உருவாக்குவதற்கும் அரசின் வலுவான உறுதிப்பாட்டை இந்த தொடர்ச்சியான முயற்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைப் புகாரளிக்க, அவர்களின் மொபைல் இணைப்புகளைச் சரிபார்க்க மற்றும் மோசடி இல்லாத டிஜிட்டல் சூழலை உருவாக்க உதவுவதற்கு சஞ்சார் சாத்தி வலைதளம் மற்றும் செயலி போன்ற கருவிகளை பயன்படுத்தி குடிமக்கள் விழிப்புடன் இருக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

---- 

(Release ID: 2150206)

AD/SM/DL


(Release ID: 2150489)