பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
பழங்குடியின மாணவர்களுக்கான கல்விக்காக 2024-25-ம் நிதியாண்டில் 4,748.92 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது – மத்திய இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே
Posted On:
30 JUL 2025 4:24PM by PIB Chennai
பழங்குடியின நலத்துறை அமைச்சகம் கடந்த 5 ஆண்டுகளில் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளித் திட்டத்தை அமல்படுத்தும். பழங்குடியின மாணவர்களுக்கான தேசியக் கல்வி சங்கத்திற்கு அளித்துள்ள நிதி குறித்த விவரங்களை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2020-21-ம் நிதியாண்டில் 1,200 கோடி ரூபாயும், 2021-22-ம் நிதியாண்டில் 1,057.74 கோடி ரூபாயும், 2022-23-ம் நிதியாண்டில் 1,999.98 கோடி ரூபாயும், 2023-24-ம் நிதியாண்டில் 2,447.61 கோடி ரூபாயும், 2024-25-ம் நிதியாண்டில் 4,748.92 கோடி ரூபாயும் விடுவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய பழங்குடியின நலத்துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே மாநிலங்களவையில் இன்று தெரிவித்தார்.
***
(Release ID: 2150189)
AD/IR/KPG/DL
(Release ID: 2150416)