அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

இளைஞர்களிடையே வகை - 2 நீரிழிவு நோயைத் தடுப்பதற்கான வெகுஜன பிரச்சாரத்தை வலியுறுத்துகிறார் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்


சில தரப்பினரால் சில நேரங்களில் கவனக்குறைவாகப் பரப்பப்படும் நீரிழிவு குறித்த தவறான தகவல்களுக்கு எதிராக டாக்டர் சிங் எச்சரிக்கை

நீரிழிவு அறிஞர்களின் மிகப்பெரிய அமைப்பான இந்திய நீரிழிவு ஆய்வுக்கான ஆராய்ச்சி சங்கத்தின் (RSSDI) நிறுவன தின விழாவில் பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இளைஞர்களிடையே வகை - 2 நீரிழிவு நோயைத் தடுப்பதற்கான வெகுஜன பிரச்சாரத்தை வலியுறுத்தினார்

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களுமே, ஒரு பிரபல நீரிழிவு நிபுணரும், இந்திய நீரிழிவு ஆய்வுக்கான ஆராய்ச்சி சங்கத்தின் மூத்த புரவலரும் ஆவார்
நீரிழிவு மற்றும் பிற வளர்சிதை மாற்றக் கோளாறுகள் மீதான கட்டுக்கதைகளை அமைச்சர் கடுமையாக விமர்சித்தார்

உடல் பருமனைக் குறைப்பதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை மீண்டும் வலியுறுத்தினார்

கல்லீரல் கொழுப்பு, உள்ளுறுப்பு கொழுப்பு மற்றும் உடல் பருமனுடன் தொடர்புடைய தொற்றாத நோய்கள் மற்றும் பிற நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்

“நீரிழிவு ஏற்படுவதற்கு முன்பே தடுப்பது - குணப்படுத்துவதை விட சிறந்தது”என்ற தலைப்பில் உரையாற்றினார் டாக

Posted On: 29 JUL 2025 5:34PM by PIB Chennai

நீரிழிவு நிபுணர்களின் மிகப்பெரிய அமைப்பான இந்திய நீரிழிவு ஆய்வுக்கான ஆராய்ச்சி சங்கத்தின் நிறுவன தின விழாவில் உரையாற்றினார் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங். பிரபல நீரிழிவு நிபுணரும் இந்திய நீரிழிவு ஆய்வுக்கான ஆராய்ச்சி சங்கத்தின் மூத்த புரவலருமான அவர், இன்று இளைஞர்களிடையே வகை - 2 நீரிழிவு நோயைத் தடுப்பதற்கான ஒரு வெகுஜன பிரச்சாரத்தை வலியுறுத்தினார். அதே நேரத்தில், சில தரப்பினரிடமிருந்து, சில நேரங்களில் கவனக்குறைவாக, பரவும் நீரிழிவு குறித்த தவறான தகவல்களுக்கு எதிராக அவர் எச்சரிக்கையும் விடுத்தார். இந்த நிகழ்வு "இந்திய நீரிழிவு ஆய்வுக்கான ஆராய்ச்சி சங்கம் - கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்" என்ற கருப்பொருளின் கீழ் இந்திய சர்வதேச மையத்தில் நடைபெற்றது.

 

இந்திய நீரிழிவு ஆய்வுக்கான ஆராய்ச்சி சங்கம் 1972 ஆம் ஆண்டு இதே நாளில் தில்லியில் நிறுவப்பட்டது. நாடு முழுவதிலுமிருந்து 53 ஆண்டுகள் ஆன இந்திய நீரிழிவு ஆய்வுக்கான ஆராய்ச்சி சங்கத்தின் அனைத்து முன்னாள் தலைவர்களும் அனைத்து மூத்த புரவலர்களும், இதன் முதல் கூட்டம் நடைபெற்ற நகரமான தில்லியில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

டாக்டர் ஜிதேந்திர சிங், உலகளவில் புகழ்பெற்ற நாளமில்லா சுரப்பியியல் நிபுணர், பொது வாழ்வில் பதவியேற்பதற்கு முன்பு மூன்று தசாப்தங்களுக்கும் மேலான மருத்துவ அனுபவம் நிறைந்தவர். நீரிழிவு மற்றும் பிற வளர்சிதை மாற்றக் கோளாறுகள் தொடர்பாக நிலவும் கட்டுக்கதைகளை டாக்டர் ஜிதேந்திர சிங் கடுமையாக எதிர்த்தார். இந்தியா தொடர்ந்து "உலகின் நீரிழிவு தலைநகரம்" என்று முத்திரை குத்தப்படுவது குறித்தும், ஒவ்வொரு மூன்றாவது இந்தியரும் ஏதோ ஒரு வகையான வளர்சிதை மாற்றக் கோளாறால் பாதிக்கப்படுவது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.

 

பிரதமர் நரேந்திர மோடியின் தேசிய சுகாதார தொலைநோக்கு பார்வையை வலுப்படுத்தும் வகையில், குறிப்பாக கல்லீரல் கொழுப்பு, உள்ளுறுப்பு கொழுப்பு மற்றும் உடல் பருமன் தொடர்பான தொற்று அல்லாத நோய்களை 10% அளவிற்கு குறைக்கும் இலக்கை டாக்டர் ஜிதேந்திர சிங் மீண்டும் வலியுறுத்தினார். பொது சுகாதார செய்திகள் மருத்துவ வெளியீடுகளில் மட்டுமன்றி சாதாரண குடிமக்களையும் சென்றடையும் வகையில் அந்த தகவல்கள் பரவலாக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட சுகாதார விழிப்புணர்வை பொதுமக்களிடையே எடுத்து செல்ல வேண்டும் என்று கூறிய டாக்டர் சிங், "நீரிழிவு நோய் வருவதற்கு முன்பே தடுப்பது - குணப்படுத்துவதை விட சிறந்தது" என்று குறிப்பிட்டார்.

 

மருத்துவத் தலைமையின் தலைமுறைகளுக்கு இடையே ஒரு பாலமாக இந்த நிகழ்வைக் குறிப்பிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங், இந்திய நீரிழிவு ஆய்வுக்கான ஆராய்ச்சி சங்கத்தின் முதல் தலைவர் பேராசிரியர் டாக்டர் எம்.எம். அஹுஜாவுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்திய நீரிழிவு ஆய்வுக்கான ஆராய்ச்சி சங்கத்தின் ஆரம்பகால வெளியீடுகள் மற்றும் தனிக்கட்டுரைகள் எவ்வாறு மருத்துவக் கல்வியில் முக்கியத்துவத்தை அடைந்துள்ளன, மேலும் அவை தொடர்ந்து பரவலாக மேற்கோள் காட்டப்படுகின்றன என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.

 

பேராசிரியர் எஸ்.வி. மது தலைமையிலான இந்திய நீரிழிவு தடுப்பு ஆராய்ச்சியின் கீழ் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு மைல்கல் ஆய்வை எடுத்துக்காட்டிய டாக்டர் ஜிதேந்திர சிங், நீரிழிவு நோயைத் தடுப்பதில் யோகாவின் நிரூபிக்கப்பட்ட செயல்திறனைக் காட்டும் கண்டுபிடிப்புகள் மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜே.பி. நட்டாவின் தலையீட்டால் சுகாதார அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

***

(Release ID: 2149819)

AD/SM/DL


(Release ID: 2149981)
Read this release in: English , Urdu , Hindi