மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
பிரதமர் மீன்வளத் துறையின் கீழ் மீன்வள உள்கட்டமைப்பு
Posted On:
29 JUL 2025 1:46PM by PIB Chennai
கடந்த ஐந்து ஆண்டுகளில் (2020-21 முதல் 2024-25 வரை) பிரதமர் மீன்வளத் திட்டத்தின் கீழ், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறை, கர்நாடகா, திரிபுரா மற்றும் ஜம்மு & காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் மீன்வள உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.6761.80 கோடி மத்திய அரசின் பங்களிப்பை உள்ளடக்கிய மொத்தம் ரூ.17,210.46 கோடி செலவில் மீன்வள உள்கட்டமைப்பு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. கர்நாடகா, திரிபுரா மற்றும் ஜம்மு & காஷ்மீர் மாநிலங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட மீன்வள உள்கட்டமைப்புகளின் மாநில வாரியான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மீன்பிடித்தல், மீன்வளர்ப்பு, பதப்படுத்துதல், போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்தல், குளங்கள் ஏற்படுத்துதல் போன்ற மீன்வளம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் பிரதமர் மீன்வளத் திட்டம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து கர்நாடகா, திரிபுரா மற்றும் ஜம்மு & காஷ்மீரில் (நேரடி மற்றும் மறைமுக) வேலைவாய்ப்பு உருவாக்கம் முறையே 260392, 142292 மற்றும் 26364 ஆகும்.
சிக்கிம் மற்றும் மேகாலயாவில் உள்ள கரிம மீன்வளக் குழுக்கள் உட்பட நாட்டில் 34 மீன்வளக் குழுமங்களை மீன்வளத் துறை, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் அறிவித்துள்ளது. கர்நாடகா, திரிபுரா மற்றும் ஜம்மு & காஷ்மீர் உள்ளிட்ட அறிவிக்கப்பட்ட மீன்வளக் குழுக்களின் மாநில வாரியான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மீனவர்கள் மற்றும் மீன் உற்பத்தியாளர்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்தவும், அவர்களின் மீன்களுக்கு அல்ல விலை கிடைப்பதை உறுதி செய்யவும், மீன் உற்பத்தியாளர் அமைப்புகளை அமைப்பதற்கு பிரதமர் மீன்வளத் திட்டம் நிதி உதவி வழங்குகிறது. மீன்வளத் துறை, தற்போதுள்ள 2000 மீன்வள கூட்டுறவுகளை மீன் உற்பத்தியாளர் அமைப்புக்களாக உருவாக்குவதற்கும், புதிய 195 மீன் உற்பத்தியாளர் அமைப்புக்களை உருவாக்குவதற்கும் ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மூலம் மீன்வளத் துறை, 2023-24 முதல் 2032-33 வரையிலான பத்து ஆண்டு காலப்பகுதியில் இரண்டு கட்டங்களாக, அதாவது 2023-24 முதல் 2027-28 வரை 6000 மற்றும் 2028-29 முதல் 2032-33 வரை 6000 என, பெரிய நீர்நிலைகள்/கடலோரப் பகுதிகளைக் கொண்ட பஞ்சாயத்துகள்/கிராமங்களில் 12,000 மீன்வள கூட்டுறவுகளை உருவாக்குவதற்கான செயல் திட்டத்தை வகுத்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2149640
***
AD/SM/PLM/RJ/KR
(Release ID: 2149766)