மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் மீன் வளத் திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பு பூங்காக்கள்

Posted On: 29 JUL 2025 1:48PM by PIB Chennai

பல்வேறு மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் பிற செயல்படுத்தும் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட திட்டங்களின் அடிப்படையில், மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம், இதுவரை ரூ.21,274.16 கோடி மதிப்புள்ள மீன்வள மேம்பாட்டு திட்டங்களை பிரதமரின் மீன் வளத் திட்டத்தின் கீழ் 9,189.79 கோடி ரூபாயை மத்திய பங்களிப்பில் இருந்து அங்கீகரித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளில் (2020-21 முதல் 2024-25 வரை) அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் மாநில வாரியான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிற்கு மத்திய தொகுப்பிலிருந்து 1156 கோடிக்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டு மத்திய அரசின் பங்கு 448 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 153 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு மத்திய தொகுப்பிலிருந்து 352 கோடிக்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டு மத்திய அரசின் பங்கு 291 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 61 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

மீன் வளர்ப்பு, தீவனம் மற்றும் இனப் பெருக்கத்திற்கான ஆதரவு முதல் பதப்படுத்துதல், குளிர்பதன சங்கிலி மற்றும் சந்தை அணுகல் வரை அனைத்து உள்கட்டமைப்பையும் வழங்குவதன் மூலம் மீன்வளர்ப்பு மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்த ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு பூங்காக்கள் பலதரப்பட்ட மீன்வளங்களின் மையங்களாகச் செயல்படுகின்றன. மீன்கள் பெருக்கத்திற்குப் பிந்தைய இழப்புகளைக் குறைக்கின்றன மற்றும் மதிப்பு கூட்டல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட சந்தைப்படுத்தல் மூலம் மீன் வளர்ப்போரின் வருமானத்தை மேம்படுத்துகின்றன. பிரதமரின் மீன் வளத் திட்டத்தின் கீழ் மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம், பல்வேறு மாநில அரசுகளின் முன்மொழிவுகளுக்கு மொத்தம் ரூ.682.60 கோடி செலவில் மொத்தம் 11 ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு பூங்காக்களை மேம்படுத்துவதற்கான ஒப்புதல்களை வழங்கியுள்ளது. பிரதமரின் மீன் வளத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு பூங்காக்களின் மாநில வாரியான விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் நிறுவப்பட்டுள்ள ஒரு ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு பூங்காவின் திட்ட செலவு 127 கோடி ரூபாயாக அனுமதிக்கப்பட்டு இதுவரை 75 கோடி ரூபாயை விடுவித்துள்ளது மத்திய அரசு

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2149644

    ***

AD/SM/KR


(Release ID: 2149682)
Read this release in: English , Urdu , Hindi