ஜல்சக்தி அமைச்சகம்
நதி பாதுகாப்பு பல்லுயிர் பெருக்கம் மற்றும் மறுசீரமைப்பு
Posted On:
28 JUL 2025 4:23PM by PIB Chennai
ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் நவம்பர் 2022 இல் தொடங்கப்பட்ட ஒரு முன்னோடி முயற்சியான நதி - நகர ஒருங்கிணைப்பு (RCA), நகர்ப்புற நதி மேலாண்மைக்கான விரிவான அணுகுமுறையை ஊக்குவிக்கிறது, நிர்வாகத் திறனை வலுப்படுத்துகிறது, நதிப் படுகைகளுக்குள் நகரங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வளர்க்கிறது மற்றும் நகர்ப்புற நதி மேலாண்மைத் திட்டங்களை (URMPs) உருவாக்குவதை ஆதரிக்கிறது.
நிலையான நகர்ப்புற நதி புத்தாக்கத்திற்கான ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக, தேசிய கங்கை தூய்மை இயக்கம் (NMCG) 2025 ஆம் ஆண்டிற்கான நதி - நகர ஒருங்கிணைப்பு செயல் திட்டத்தை அங்கீகரித்துள்ளது. ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்பட வேண்டிய துடிப்பான மற்றும் செயல் சார்ந்த முன்முயற்சிகளின் வரைபடத்தை இது வகுக்கிறது. இந்தத் திட்டம் தொடர்ச்சியான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், அறிவுத் தளங்கள், தொழில்நுட்ப கருவிகளின் மேம்பாடு, நிபுணர் வழிகாட்டுதல் மற்றும் கருப்பொருள் ஆய்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இவை அனைத்தும் இந்தியாவின் வளர்ந்து வரும் நகரங்களுக்குள் நதிகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்ட நகர்ப்புற திட்டமிடலை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்துகின்றன. பல்வேறு மாநிலங்களில் நதிகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்ட பெரும் திட்டமிடல் பயிற்சித் திட்டங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் நகரமயமாக்கல் திட்டங்களுக்குள் நதிகளின் பாதுகாப்பு குறித்த கருத்துக்களை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
ஜல் சக்தி அமைச்சகம், டெஹ்ராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனத்துடன் இணைந்து, கங்கை நதி மற்றும் அதன் துணை நதிகளின் (யமுனா, காக்ரா, ராம்கங்கா, கோசி, கண்டக், சம்பல், சோன், கோமதி, தாமோதர், ரூப்நாராயண் மற்றும் அஜய்) சுற்றுச்சூழல் மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளது. தேசிய நதி பாதுகாப்பு இயக்குநரகத்தால் நிதியளிக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், பராக், நர்மதா, மகாநதி, கோதாவரி, காவிரி, பெரியார் மற்றும் பம்பா ஆகிய இதர ஏழு இந்திய நதிகளின் மதிப்பீட்டையும் மேற்கொண்டுள்ளது.
நன்னீர் பல்லுயிர் பாதுகாப்பு முயற்சிகளை முன்னிலைப்படுத்துவதற்காக, ஆறுகளின் பல்லுயிர் சுயவிவரம் மற்றும் அடையாளம் காணப்பட்ட மாசுபடுத்தும் இடங்கள் தொடர்பான தகவல்களைப் பரப்புவதற்காக, டெஹ்ராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனம் ஒரு தகவல் பலகையை (www.rivres.in) உருவாக்கியுள்ளது. இது கங்கை நதிப் படுகை மற்றும் பிற ஆய்வு செய்யப்பட்ட ஆறுகளில் மேற்கொள்ளப்படும் சமூக ஈடுபாடு, திறன் மேம்பாடு, மீட்பு மற்றும் மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு கல்வி ஆகியவற்றின் அடிப்படையில் பாதுகாப்பு முயற்சிகள் பற்றிய தகவல்களையும் வழங்குகிறது.
இந்தத் தகவலை ஜல் சக்தி மாநில அமைச்சர் ஸ்ரீ ராஜ் பூஷண் சவுத்ரி இன்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
***
(Release ID: 2149300)
AD/SM/DL
(Release ID: 2149466)