விவசாயத்துறை அமைச்சகம்
ரைசனில் நடைபெற்ற வளர்ச்சித் திட்ட ஆய்வுக் கூட்டம் - மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் பங்கேற்பு
Posted On:
27 JUL 2025 3:43PM by PIB Chennai
மத்திய வேளாண்மை, கிராமப்புற வளர்ச்சித் துறைகளின் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் நேற்று (26.07.2025) தமது நாடாளுமன்றத் தொகுதியான விதிஷாவிற்குச் சென்று, ரைசனில் மாவட்ட மேம்பாட்டு ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழுவான திஷா (DISHA) கூட்டத்துக்குத் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில், தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டம், பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், பிரதமரின் கிராம சாலைகள் திட்டம் உள்ளிட்ட பல திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆழமான விவாதங்கள் நடைபெற்றன.
மாவட்டத்தில் வேளாண் துறையின் பணிகளை ஆய்வு செய்த அவர், போலி உரங்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். ரைசன் பகுதியை முன்மாதிரி பகுதியாக மாற்றும் நோக்கில் செயல்படுமாறு மத்திய அமைச்சர் திரு சௌகான் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.
******
(Release ID: 2149067)
AD/PLM/RJ
(Release ID: 2149117)