கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், மூத்த சிந்தனையாளர்கள் திரேந்திரநாத் பெஸ்பருவா, திரேந்திரநாத் சக்ரவர்த்தி ஆகியோரை குவஹாத்தியில் சந்தித்தார்
Posted On:
26 JUL 2025 6:56PM by PIB Chennai
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், புகழ்பெற்ற பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு திரேந்திரநாத் பெஸ்பருவாவை குவஹாத்தியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். தி சென்டினல் பத்திரிகையின் நிறுவன ஆசிரியரும், அசாமின் இலக்கியம், பத்திரிகைத் துறைகளில் மதிப்பிற்குரிய நபருமான பெஸ்பருவாவின் சிறந்த பங்களிப்புகளை அமைச்சர் பாராட்டினார்.
பெஸ்பருவா-வின் ஈடு இணையற்ற பணிகளும், பத்திரிகைத் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பும், இளைய தலைமுறையினர் ஊடக, இலக்கியத் துறைகளில் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் ஈடுபட ஊக்கமளிக்கிறது என்று திரு சர்பானந்த சோனோவால் கூறினார் .
அதைத் தொடர்ந்து பிரபல சிந்தனையாளரும் எழுத்தாளருமான திரேந்திரநாத் சக்ரவர்த்தியை குவஹாத்தியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து அமைச்சர் கலந்துரையாடினார்.
97 வயதில் திரு திரேந்திரநாத் சக்ரவர்த்தி, அர்ப்பணிப்புடனும் அறிவுசார் வீரியத்துடனும் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்வதாக அமைச்சர் கூறினார். இன்றைய இளைஞர்கள் அவரது ஒழுக்கமான வாழ்க்கை முறையிலிருந்து உத்வேகம் பெற்று, சிறந்து விளங்க வேண்டும் என்று நம்புகிறேன் என்று திரு சர்பானந்த சோனோவால் கூறினார்.
******
(Release ID: 2148914)
AD/PLM/SG
(Release ID: 2148926)