கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
கப்பல் சுற்றுலா பாரத் இயக்கம்
प्रविष्टि तिथि:
25 JUL 2025 1:28PM by PIB Chennai
2024-25 நிதியாண்டில் 272 கப்பல் சுற்றுலாக்கள் நடைபெற்றன. இதில் 4.92 லட்சம் பயணிகள் பங்கேற்றனர். 2023-24 நிதியாண்டில் 253 கப்பல் சுற்றுலாக்கள் 4.7 லட்சம் பயணிகளுடன் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. கப்பல் சுற்றுலா தொழிலில் பல ஒழுங்குமுறை திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கப்பல் சுற்றுலா சேவையை அண்மையில் புதுச்சேரி துறைமுகம் மேற்கொண்டது. எம்ப்ரெஸ் கார்டெலியா சுற்றுலா கப்பல் புதுச்சேரிக்கு 4.7.2025 அன்று முதன்முறையாக வருகை புரிந்தது. சுற்றுலா கப்பல் துறைமுகங்கள் மும்பை(மகாராஷ்டிரம்),மர்முகோவா(கோவா), கொச்சி (கேரளம்), சென்னை(தமிழ்நாடு), புது மங்களூர் (கர்நாடகம்), விசாகப்பட்டினம் (ஆந்திரப் பிரதேசம்) ஆகிய இடங்களில் உள்ளன. அதுமட்டுமல்லாமல், புதுச்சேரி, லட்சத்தீவுகள் மற்றும் ஸ்ரீவிஜயபுரம் ஆகிய இடங்களுக்கும் சுற்றுலா கப்பல்கள் வந்து போகின்றன. 2024-25 ஆம் நிதியாண்டில் 29 தேசிய நீர்வழிப்பாதைகள் 11 மாநிலங்களில் செயல்பாட்டில் உள்ளன. இதில் சுற்றுலா கப்பல்களுக்கென்றே பிரத்தியேகமாக உள்ள 3 நீர்வழிப்பாதைகள் உள்ளடங்கும்.
கப்பல் சுற்றுலா பாரத் இயக்கத்தின் முக்கிய செயல்திறன் குறியீட்டின்படி, தொடக்க நிலை குறிக்கோள் என்பது 0.4 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகும்.
இத்தகவலை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு. சர்பானந்த சோனாவால் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்தார்.
***
(Release ID: 2148283)
AD/TS/SG/KR/DL
(रिलीज़ आईडी: 2148587)
आगंतुक पटल : 16