பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உள்நாட்டு பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல்

Posted On: 25 JUL 2025 3:19PM by PIB Chennai

உள்நாட்டு பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக பாதுகாப்பு அமைச்சகம் நிதி ஒதுக்கி வருகின்றது. கடந்த மூன்று ஆண்டுகளில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ) ரூ.29,558.66 கோடி மதிப்புள்ள  திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இதன் விவரம் கீழே தரப்படுகின்றது:

ஆண்டு

அனுமதி அளிக்கப்பட்ட

திட்டங்களின் எண்ணிக்கை

செலவுத் தொகை(ரூபாய் கோடியில்)

01-ஜனவரி-2023 முதல் 31-டிசம்பர்-2023 வரை

40

ரூ. 3,842.71 Cr

01-ஜனவரி-2024 முதல் 31-டிசம்பர்-2024 வரை

43

ரூ. 22,175.49 Cr

01-ஜனவரி-2025 முதல் இன்றுவரை

20

ரூ.  3,540.46 Cr

 

பாதுகாப்பு சூழல்சார் அமைப்பில் சிவில்-இராணுவ பங்கேற்பை அதிகரிக்க பல்வேறு அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில முக்கியமான சீர்திருத்தங்கள் கீழே தரப்படுகின்றன:

•     விரைவாக மூலவடிவத்தை மேம்பாடு செய்வதற்காக மேம்பாடு-உற்பத்தி சார்ந்த பங்குதாரர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

•     டி.ஆர்.டி.ஓ. தொழில்துறை-கல்விப்புலம்-தகைசால் மையம்  மூலமான திட்டங்களின்வழி உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களை விரைவாக நடைமுறைப்படுத்த உரிய தொழிற்சாலைகள் சேர்க்கப்பட்டு வருகின்றன.

•     ஆளில்லாத வானூர்திக்கான சான்றிதழ் வழங்குவதில் பொதுவான அணுகுமுறைக்காக இராணுவ விமானத் தகுதி மற்றும் சான்றளிப்பு மையமானது டி.ஜி.சி.ஏ.வுடன் இணைந்து பணியாற்றி வருகின்றது.

•     நாடு முழுவழுதும் டி.ஆர்.டி.ஓ. அமைப்பானது 15 டி.ஆர்.டி.ஓ. தொழிற்சாலை கல்விப்புல தகைசால் மையங்களை  நிறுவியுள்ளது.

•     இப்போது டி.ஆர்.டி.ஓ. ஆய்வகங்களில் உலகத்தரமான பரிசோதனை வசதிகள் தொழிற்சாலைகளுக்கு கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.

•     தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்காக டி.ஆர்.டி.ஓ. வலைத்தளத்தில் டி.ஆர்.டி.ஓ. காப்புரிமைகள் கிடைக்கின்றன்.

•     பாதுகாப்புத் துறை கண்காட்சியில் கனவு காணத் துணியுங்கள் 4.0 போட்டி தொடங்கப்பட்டுள்ளது.

இத்தகவலை பாதுகாப்பு இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் இன்று மக்களவையில் ஒரு எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்தார்.

***

(Release ID: 2148337)

AD/TS/SG/DL


(Release ID: 2148586)
Read this release in: English , Urdu , Hindi