பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

துணிச்சல்மிக்க பாரதம் கார் பேரணி

Posted On: 25 JUL 2025 3:00PM by PIB Chennai

வீரம் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுடன் நாட்டின் பெருமையைப் பறைசாற்றும் துணிச்சல்மிக்க பாரதம் என்னும் கார் பேரணி புதுதில்லியில் நடைபெறுகிறது.

முன்னேற்ற நல்லிணக்க மேம்பாட்டு வர்த்தகம் மற்றும் தொழில் சபை, இந்திய விமானப்படையுடன் இணைந்து இந்தக் கார் பேரணியை நடத்துகிறது. இந்தப் பேரணி, ஜூலை 25 முதல் ஜூலை 27 வரை புதுதில்லி விமானப்படை நிலையத்திலிருந்து தொடங்கி, அம்பாலா விமானப்படை நிலையம் வழியாக ஆதம்பூர் விமானப்படை நிலையத்திற்குச் செல்லும். இந்தப் பேரணியை விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங், ஜூலை 25, 2015 அன்று புது தில்லி விமானப்படை தளத்திலிருந்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

சாகச இயக்குநரகத்தின் தலைமையில், இந்தியக் கடலோர காவல்படை, டி.ஆர்.டி.ஓ மற்றும் என்.சி.சி ஆகிய மூன்று படைகளிலிருந்தும் மொத்தம் 112 பேர் இந்தப் பேரணியில் பங்கேற்கின்றனர். இந்தப் பேரணி, முக்கியமாக  40 மின்சார வாகனங்களில் சுமார் 800 கி.மீ. தூரம் பயணிக்கிறது.

"ஆபரேஷன் சிந்தூர்" வெற்றியை நினைவுகூரும் வகையிலும், நமது ஆயுதப் படைகளின் வீரத்தை கௌரவிப்பதாகவும் இந்த கார் பேரணியின் நோக்கம் உள்ளது. இந்தப் பேரணி, இளைஞர்களுடன் தொடர்பு கொள்ளவும், ஊக்கப்படுத்தவும், தைரியம், ஒழுக்கம் மற்றும் தேசபக்தி ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில், வழியில் கல்லூரிகள்/பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும்.

***

(Release ID: 2148325)

AD/PKV/SG/KR/DL


(Release ID: 2148533)
Read this release in: English , Urdu , Hindi