சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட புற்றுநோய் சிகிச்சை மையங்கள்

Posted On: 25 JUL 2025 3:49PM by PIB Chennai

நாடு முழுவதும் நடப்பாண்டில் 200-க்கும் மேற்பட்ட புற்றுநோய் பராமரிப்பு மையங்களை உருவாக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள இடவசதி மற்றும் போக்குவரத்து வசதிகளை கருத்தில் கொண்டு இந்த புற்றுநோய் பராமரிப்பு மையங்கள் உருவாக்கப்படவுள்ளது. எனினும் மாநில அரசுகள் வழங்கும் முன்மொழிவை அடிப்படையாகக் கொண்டு இந்த மையங்கள் இதர அரசு சுகாதார நிலையங்களிலும் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு மையமும் 1.49 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் இத்தகைய மையங்கள் புற்றுநோய் சிகிச்சைக்கான இடைவெளியை குறைக்க உதவிடும். இதற்கென மாநில அரசுகளுக்கு தேவைப்படும் நிதியுதவி தேசிய சுகாதார இயக்கத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்படும்.

2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அறிவித்துள்ளபடி மாநில அரசுகளின் ஆலோசனைகளுடன் புற்றுநோய் பராமரிப்பு மையங்களை அமைப்பதற்கான திட்டத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தரவுகள் அடிப்படையில் மத்திய சுகாதார அமைச்சகம் செயல்படுத்துகிறது. இதன்படி 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த புற்றுநோய் பராமரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்துள்ள பதிலில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் திரு பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்தார்.

***

(Release ID: 2148368)
AD/SV/AG/KR/DL


(Release ID: 2148524)
Read this release in: English , Urdu , Marathi , Hindi