சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
9 முக்கிய துறைகளை உள்ளடக்கிய பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள்
Posted On:
24 JUL 2025 4:01PM by PIB Chennai
பருவநிலை மாற்றத்திற்கான தேசிய செயல் திட்டம், விவசாயம், எரிசக்தித் திறன், பசுமை இந்தியா, இமயமலைப் பகுதிகளில் சூழல் அமைப்புகள், சுகாதாரம், சூரியசக்தி, பருவநிலை மாற்றம் தொடர்பான உத்திசார் அறிவு, நீடித்த வாழ்விடம் மற்றும் தண்ணீர் போன்ற குறிப்பிடத்தக்க 9 துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய இயக்கத்தை உள்ளடக்கியதாகும். இவற்றில் 6 துறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அனைத்து இயக்கங்களும் முறைப்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள் வாயிலாக பல்வேறு திட்டங்கள் மூலம் அமல்படுத்தப்படுகிறது. நீர், சுகாதாரம், விவசாயம், வனம், பல்லுயிர் பெருக்கம், எரிசக்தி, வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது போன்ற முக்கிய துறைகளில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பருவகால மாற்றத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்து வலு சேர்க்க முடியும்.
சூரிய மின் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக இந்தியாவை உருவெடுக்கச் செய்யும் வகையில் தேசிய சூரியசக்தி இயக்கம் தொடங்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் சூரிய மின் உற்பத்திக்கான கொள்கைகள் வகுக்கப்பட்டன. இதன்படி, ஜூன் 30-ம் தேதி வரை நாடு முழுவதும் 116.25 ஜிகாவாட் சூரிய மின் உற்பத்தி செய்யப்பட்டு சாதனைப் படைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சகத்திற்கு சூரிய மின் உற்பத்திக்காக 38,420.82 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீடு 31,483.86 கோடி ரூபாயும், செலவுகள் 25,165.87 கோடி ரூபாயாக உள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சுற்றுச்சூழல், வனம், மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2147752
***
(Release ID: 2147752)
AD/SV/KPG/KR
(Release ID: 2147800)