உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போதைப்பொருள் தடுப்புக்கு ஒருங்கிணைப்பு மையம்

Posted On: 23 JUL 2025 1:43PM by PIB Chennai

போதைப்பொருள் தடுப்பு சட்ட அமலாக்கம் தொடர்பான விஷயங்களில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தரப்பினரிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசு 22.11.2016- ம் தேதி போதைப்பொருள் ஒருங்கிணைப்பு செயல்முறையை அமைத்துள்ளது. இந்தியாவில் போதைப்பொருள் கடத்தல், அதன் சட்ட விரோதப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய, மாநில போதைப்பொருள் தடுப்பு சட்ட அமலாக்க முகமைகள், பிற தரப்பினரிடையே சிறந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்யும் வகையில், 4-அடுக்கு போதைப்பொருள் ஒருங்கிணைப்பு மையத்தை அமைப்பதன் மூலம் அதனை தடுத்து நிறுத்துவதற்கான செயல்முறையை மத்திய அரசு 29.07.2019-ம் தேதி மறுசீரமைத்தது. கொள்கைகள் சார்ந்த அம்சங்களில் பல்வேறு தரப்பினரிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கும், கள அளவிலான பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தேவையான நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் ஏதுவாக, இந்த செயலாக்க நடைமுறைகள் 25.03.2022-ம் தேதி மேலும் மறுசீரமைக்கப்பட்டது. பின்னர் தேவைக்கு ஏற்ப இந்த அமைப்பில் புதிய உறுப்பினர்களை மத்திய அரசு சேர்த்தது.

இந்த நான்கு அடுக்கு செயல்முறையுடன், சமூக நல்வாழ்வு, தேசிய பாதுகாப்புக்கு போதைப் பொருட்களின் நடமாட்டத்தால் ஏற்படும் அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வகை செய்கிறது. போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் இணையத்தளத்தில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதன் பயன்பாடு தொடர்பான அனைத்து தகவல்களுக்கும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுடன், முழுமையான அறிவு மேலாண்மை அமைப்பாகவும் செயல்படுகிறது. இது நிறுவனங்களுக்கு இடையேயான மேம்பட்ட ஒருங்கிணைப்பு, நிகழ்நேர புலனாய்வுத் தகவல்களை பகிர்வது, சட்ட விரோத போதைப்பொருள் நடவடிக்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது, உத்திசார் நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்தல் மற்றும் கண்காணித்தல், போதைப்பொருள் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதில் திறன் மேம்பாடு, மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது, நிதிப்  பரிவர்த்தனை தொடர்பான விசாரணை மற்றும் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளை இலக்காகக் கொண்டதாகும்.

போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விடுவிப்பது மற்றும் மறுவாழ்வுத் திட்டங்களை மேம்படுத்துதல், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கும் உதவிகரமாக அமைந்துள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2147186

****** 


(Release ID: 2147481)
Read this release in: English , Urdu , Hindi , Assamese