சுற்றுலா அமைச்சகம்
ஜம்மு & காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
21 JUL 2025 4:51PM by PIB Chennai
கடந்த 5 ஆண்டுகளில் ஜம்மு & காஷ்மீருக்கு உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
அதன்படி 2024ம் ஆண்டு ஜம்மு & காஷ்மீருக்கு 2,35,24,629 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 65,452 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர். 2024ம் ஆண்டு உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 13.76 சதவீதமாகவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 18.28 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு 2016-17இல் 519 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மொத்தம் 6 திட்டங்களுக்கு அனுமதி வழங்கி இருந்தது. இந்த திட்டங்கள் முழுமையாக முடிவடைந்துள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில் இந்த திட்டங்களினால் உருவான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளின் அளவை மதிப்பீடு செய்ய அமைச்சகம் எந்த முறையான ஆய்வையும் மேற்கொள்ளவில்லை.
இந்த தகவலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2146397
***
AD/TS/GK/LDN/KR/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2146532)
வருகையாளர் எண்ணிக்கை : 12