ஜல்சக்தி அமைச்சகம்
தமிழ்நாட்டில் 9 நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 4.741 பில்லியன் கனமீட்டர்
இடுகை இடப்பட்ட நாள்:
21 JUL 2025 4:02PM by PIB Chennai
மத்திய நீர்வள ஆணையம் நாட்டில் உள்ள முக்கியமான நீர் நிலைகளின் கொள்ளளவு திறனை கண்காணித்து வாரம் தோறும் அறிக்கையை வெளியிடுகிறது. நீர் நிலைகளின் இருப்புக் கண்காணிப்பு முறைக்கு முன்னால் தொலைபேசி மற்றும் தொலைநகலி மூலம் சம்பந்தப்பட்ட திட்ட அதிகாரிகளிடமிருந்து தகவல்கள் திரட்டப்படுகின்றன. இவை பகுப்பாய்வு செய்யப்பட்டு அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன.
தற்போதைய நிலவரப்படி நாட்டின் 161 முக்கியமான நீர்நிலைகளின் இருப்புப் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இந்த நீர்நிலைகளின் மொத்த கொள்ளளவு 182.46 பில்லியன் கனமீட்டர் ஆகும். தமிழ்நாட்டில் 9 நீர்நிலைகளின் கொள்ளளவு 4.741 பில்லியன் கனமீட்டர் ஆகும்.
இந்தத் தகவலை மத்திய ஜல்சக்தித்துறை இணையமைச்சர் திரு ராஜ் பூஷன் சௌத்ரி மாநிலங்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
---
(Release ID: 2146366)
AD/TS/SMB/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2146457)
வருகையாளர் எண்ணிக்கை : 22