சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெண்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக சாஸ்திரி பவனில் புதிய வசதி திறப்பு

Posted On: 18 JUL 2025 4:56PM by PIB Chennai

பணியிட நல்வாழ்வை நிறுவனமயமாக்குவதற்கான முதல் முயற்சியாக, சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சட்ட விவகாரத் துறை, இன்று பெண் ஊழியர்களுக்காக பிரத்யேகமாக சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்ட சுகாதாரம், உடற்பயிற்சி மற்றும் நல்வாழ்வு வசதி அறையைத் திறந்துள்ளது.

இந்த வசதியை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால், சட்டத்துறை  செயலாளர் டாக்டர் அஞ்சு ரதி ராணா, துறையின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஏராளமான பெண் அதிகாரிகள் முன்னிலையில் முறையாகத் திறந்து வைத்தார்.

.சாஸ்திரி பவன் வளாகத்தில் அமைந்துள்ள இந்த பகுதியில், உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி பாலூட்டும் அறையுடன் கூடிய  நல்வாழ்வை மையமாகக் கொண்ட மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த வசதி பெண் ஊழியர்களுக்கு உடல் தகுதி, மன நல்வாழ்வு மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலையை ஊக்குவிக்கும் இடமாக கருதப்படுகிறது.

திறப்பு விழாவில் பேசிய திரு மேக்வால், இந்த முயற்சிக்காக துறையைப் பாராட்டினார், உண்மையிலேயே பொருத்தமாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருக்கும் இந்தியாவை உருவாக்குவதற்கு பெண் ஊழியர்களின் நல்வாழ்வு அவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார், மேலும் அந்த இடத்தையும் வசதிகளையும் முழுமையாகப் பயன்படுத்த அவர்களை ஊக்குவித்தார்.

பெண்கள் ஆரோக்கிய பகுதி என்பது பெண்களுக்கான சுகாதார மையமாக இருக்கும்.

---

(Release ID: 2145800)

AD/TS/PKV/KPG/RJ/DL


(Release ID: 2145903)
Read this release in: English , Urdu , Hindi