தேசிய மனித உரிமைகள் ஆணையம்
தில்லி, கிரேட்டர் நொய்டாவில் பொது இடங்களில் இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவங்கள் - தாமாக முன்வந்து விசாரிக்கிறது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
Posted On:
16 JUL 2025 2:39PM by PIB Chennai
தில்லி, கிரேட்டர் நொய்டா ஆகிய இடங்களில் அண்மையில் இரண்டு ஆண் குழந்தைகள் நீரில் மூழ்கி இறந்த சம்பவங்கள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. தில்லியில் 4 வயது சிறுவன் திறந்தவெளி வடிகாலில் விழுந்து இறந்ததாக தகவல் வெளியானது.
மற்றொரு சம்பவத்தில், உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் ஒரு பூங்காவில் உள்ள நீர்நிலையில் 6 வயது சிறுவன் மூழ்கி இறந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
தில்லியில் நடந்த சம்பவம் தொடர்பாக, தலைமைச் செயலாளர், காவல் ஆணையர், தில்லி மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி, இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
கிரேட்டர் நொய்டாவில் நடந்த சம்பவத்தில், இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு கிரேட்டர் நொய்டா தொழில் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர், காவல் ஆணையர் ஆகியோருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2145143
***
(Release ID: 2145143)
VL/TS/PLM/KR
(Release ID: 2145232)
Visitor Counter : 2