பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் மையமாக கல்வி இருக்க வேண்டும் என்று அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
15 JUL 2025 3:10PM by PIB Chennai
நமது நாடு வளர்ச்சியடைந்து வரும் நிலையில், நமது முதன்மைக் கவனம் கல்வியாக இருக்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். சமூக மேம்பாட்டு மன்றம் ஏற்பாடு செய்திருந்த “இந்தியாவில் பள்ளிக்கல்வி: அனைவருக்கும் சமமான, தரமான கல்வி கிடைப்பதை நோக்கி” என்ற கருத்தரங்கில் உரையாற்றிய அவர், நான்கு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தில் இருந்து 2047-க்குள் 35 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்பதை நோக்கிய இந்தியாவின் வளர்ச்சிப் பயணமானது அனைவருக்கும், உயர்தரமான, அனைவரையும் உள்ளடக்கிய கல்வியின் மூலம் பொறுப்பான, உற்பத்தி சார்ந்த குடிமக்கள் என்ற தலைமுறையை வளர்ப்பதைச் சார்ந்தே உள்ளது என்றார்.
2002-ம் ஆண்டில் வாஜ்பாய் அரசு காலத்தில் அரசியல் சட்டத்தின் 86-வது திருத்தத்தின் மூலம் கல்வி அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மாறியது. இதன்படி, 6 முதல் 14 வயது வரை உள்ள அனைவருக்கும் கட்டணமின்றி கட்டாயக் கல்வி உறுதி செய்யப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சீர்திருத்தம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்காலத்தில் மேலும் வலுப்பெற்றுள்ளது என்று திரு பூரி கூறினார்.
கல்வி என்பது நாட்டின் வளர்ச்சி விருப்பங்களை நேரடியாக வடிவமைப்பதால் அதனை நாட்டின் முன்னுரிமையாகவும், மாற்றத்தை ஏற்படுத்தும் அரசியல் கோட்பாடாகவும் பார்க்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவின் ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான, தரமான கல்வியை உறுதி செய்ய வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட பேராசிரியர் முச்குந்த் துபே பெயரில் சமூக மேம்பாட்டிற்கான மன்றத்தில் கல்வி உரிமைக்கான மையம் அமைக்கப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவித்த அமைச்சர், இதில், முதலாவது நிகழ்வை தொடங்கிவைக்கும் வாய்ப்பு தமக்கு கிடைத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2144832
***
AD/TS/SM/SMB/RJ/KR
(रिलीज़ आईडी: 2144894)
आगंतुक पटल : 7