சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தேசிய மருத்துவ ஆணையம், தன்னாட்சி வாரியங்கள் மற்றும் தேடல் குழுவின் பகுதிநேர உறுப்பினர்கள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்
Posted On:
15 JUL 2025 3:54PM by PIB Chennai
தேசிய மருத்துவ ஆணையம், தன்னாட்சி வாரியங்கள் மற்றும் தேடல் குழுவின் பகுதிநேர உறுப்பினர்களை குலுக்கல் மூலம் நியமனம் செய்யும் பணியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் திரு. ஜகத் பிரகாஷ் நட்டா பங்கேற்றார். இந்த நியமன நடைமுறை தேசிய மருத்துவ ஆணைய சட்டம் 2019-ல் வகுக்கப்பட்டுள்ளது.
தேசிய மருத்துவ ஆணைய சட்டம் 2019-ன் படி இரண்டு ஆண்டுகளுக்கு, இந்த நியமனங்கள் செய்யப்படுகின்றன. பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் பின்வரும் பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்:
மருத்துவ ஆலோசனைக் குழுவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் பரிந்துரையிலிருந்து தேசிய மருத்துவ ஆணையத்தின் 10 பகுதிநேர உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்: குஜராத், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், அந்தமான் & நிக்கோபார் தீவுகள், ஆந்திரப் பிரதேசம், மிசோரம், மேகாலயா, ஜார்கண்ட், சண்டிகர் மற்றும் மத்தியப் பிரதேசம்
மருத்துவ ஆலோசனைக் குழுவில் மாநில மருத்துவ குழுமம் பரிந்துரை செய்ததிலிருந்து தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒன்பது பகுதிநேர உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்: மேற்கு வங்கம், கர்நாடகா, நாகாலாந்து, சத்தீஸ்கர், திரிபுரா, ஜம்மு &காஷ்மீர், அசாம், மணிப்பூர் மற்றும் உத்தரகண்ட்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2144850
***
AD/TS/IR/SG/KR
(Release ID: 2144882)
Visitor Counter : 2