அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில்களை வலுப்படுத்துவதற்கான நிதி ஆயோக்கின் செயல்திட்டத்தை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார்
Posted On:
10 JUL 2025 4:51PM by PIB Chennai
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறைகளுக்கான இணையமைச்சரும் (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன் , பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறைகளுக்கான இணையமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், இன்று நிதி ஆயோக் வளாகத்தில் 'மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில்களை வலுப்படுத்துவதற்கான நிதி ஆயோக்கின் செயல்திட்டத்தை' வெளியிட்டார். இந்தியாவின் அறிவு சார்ந்த பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக மாநிலங்கள் முழுவதும் வலுவான மற்றும் ஒருங்கிணைந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய முயற்சியாக இந்த செயல்திட்டம் உள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் பொருளாதார எழுச்சியின் முக்கிய வளர்ச்சி இயந்திரமாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அடையாளம் கண்டு, "இந்தியா 4வது இடத்திலிருந்து 3வது பெரிய பொருளாதாரத்திற்கும் அதற்கு அப்பாலும் செல்ல வேண்டுமென்றால், இந்த வளர்ச்சியை இயக்குவது அறிவியல் மற்றும் தொழில்நுட்பமே" என்று கூறினார்.
பிராந்திய அறிவியல் திறமைகளின் முழு திறனையும் பயன்படுத்திக் கொள்வதற்காக, மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு இணைந்திருப்பதை அவர் எடுத்துரைத்தார். ஆராய்ச்சி ஆய்வகங்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையில் இடைத்தரகர்களாக செயல்படவும், அறிவியல் கண்டுபிடிப்புகளின் அடிமட்ட அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவும், மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில்களை அவர் வலியுறுத்தினார். வளர்ந்த பாரதம் @2047 இன் தேசிய செயல்திட்டத்துடன் தங்கள் அறிவியல் பார்வையை இணைக்கவும், அறிவுசார் கூட்டாண்மைகள் மூலம் மட்டுமல்லாமல், முதலீட்டு கூட்டாண்மைகள் மூலமாகவும் தொடக்கநிலை நிலைத்தன்மையை உறுதி செய்ய ஆரம்பகால தொழில் இணைப்புகளை ஊக்குவிக்கவும் அவர் மாநிலங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் தனித்துவமான அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பாதையைக் கண்டறிந்த டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமர் திரு மோடி, தொடர்ந்து அறிவியல் முன்னேற்றத்திற்கு ஆதரவளித்து வருவதாகக் கூறினார். "கடந்த 11 ஆண்டுகளில் செங்கோட்டையில் இருந்து அவர் ஆற்றிய ஒவ்வொரு சுதந்திர தின உரையிலும், முக்கிய அறிவியல் முயற்சிகளை அவர் எடுத்துரைத்துள்ளார், தூய்மை இந்தியா இயக்கம், டிஜிட்டல் இந்தியா, ஸ்டாண்ட்-அப் மற்றும் ஸ்டார்ட்-அப் இந்தியா, ஆழ் கடல் மிஷன்,டிஜிட்டல் சுகாதார அட்டை முதலியவை இதில் அடங்கும்" என்று டாக்டர் சிங் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2143737
----
(Release ID: 2143737)
AD/RB/ DL
(Release ID: 2143886)