அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

இந்தியா, 2030 ஆம் ஆண்டுக்குள் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான உயிரி பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டுள்ளது: டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 07 JUL 2025 5:28PM by PIB Chennai

இந்தியாவின் உயிரி தொழில்நுட்ப இயக்கத்தை பொதுமக்கள் பரந்த அளவில் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், இந்த இயக்கத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று அழைப்பு விடுத்தார். ஒவ்வொரு இந்தியரும் நாட்டின் உயிரி பொருளாதாரத்தில் ஒரு பங்குதாரர் என்றும் அவர் கூறினார். நாடு தழுவிய உலக உயிரி உற்பத்தி பொருள் தின கொண்டாட்டமான தி பயோ இ 3 வே நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், 2030-ம் ஆண்டுக்குள் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான உயிரி பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்று அரசு உறுதிபூண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்தியாவின் உயிரி தொழில்நுட்ப சூழல் அமைப்பைப் பொறுத்தவரை, 10 ஆண்டுகளுக்கு  முன்பு சுமார் 50 புத்தொழில் நிறுவனங்கள் இருந்த நிலையில், தற்போது அது சுமார்  11,000 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார். கொள்கை ஆதரவு மற்றும் நிறுவன கூட்டாண்மைகளால் இது சாத்தியமானது என்று அமைச்சர் எடுத்துரைத்தார். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பயோ இ 3 கொள்கையைப் பற்றி குறிப்பிடுகையில், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமத்துவத்துடன் உயிரி பொருளாதார இலக்குகளை சீரமைப்பது என்பதுதான் நிலையான உயிரி உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருப்பதற்கு அடித்தளமாக அமைகிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2142921

***

AD/TS/IR/LDN/DL


(Release ID: 2142956)
Read this release in: English , Urdu , Hindi , Marathi