இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
புனேயில் ஏபிசி ப்ரோ கூடைப்பந்து லீக் சீசன் 4 ஐ மத்திய இணையமைச்சர் திருமதி ரக்ஷா காட்சே தொடங்கி வைத்தார்
Posted On:
07 JUL 2025 3:26PM by PIB Chennai
ஏபிசி ப்ரோ கூடைப்பந்து லீக் சீசன் 4 நேற்று, (2025 ஜூலை 6) புனேவின் கராடியில் உள்ள ராஜாராம் பிகு பதரே மைதானத்தில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா காட்சே கலந்து கொண்டு சிறப்பித்தார். அடிப்படை அளவில் கூடைப்பந்து விளையாட்டு வீரர்களின் திறமைகளை வளர்த்தல், இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு தொழில்முறை தளத்தை வழங்குதல் மற்றும் நாடு முழுவதும் ஒரு வலுவான விளையாட்டு சூழலை மேம்படுத்துதல் ஆகியவை இப்போட்டியின் நோக்கமாகும்.
முதல் போட்டி மாலை 4:00 மணிக்கு தொடங்கியது. அதைத் தொடர்ந்து மாலை 5:15 மணிக்கு தொடக்க விழா நடைபெற்றது. இதில் திருமதி ரக்ஷா கட்சே பங்கேற்று உரையாற்றி, கோப்பையை அறிமுகம் செய்தார். இவ்விழாவில் தேசிய கீதம் மற்றும் பங்கேற்கும் அணிகளின் அணிவகுப்பு ஆகியவை இடம்பெற்றன. ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கை முறையிலும் விளையாட்டை ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றுவதற்கும், சிறு வயதிலிருந்தே விளையாட்டு அம்சத்தை வளர்ப்பதற்கும் அமைச்சகத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அமைச்சர் வலியுறுத்தினார். இந்த தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஏ.பி.சி. ஃபிட்னஸ் நிறுவனம், இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பு மற்றும் தொடர்புடைய அனைத்து கூட்டாண்மைகளின் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் போட்டியில் பங்கேற்பதற்கான தேர்வில் கலந்து கொண்டனர். அவர்களில் ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் 310 வீர்ர்கள் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 14 வயது மற்றும் 17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவுகளில் 19 அணிகளில் அவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2142889
***
AD/TS/IR/LDN/KR
(Release ID: 2142915)