விவசாயத்துறை அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் காஷ்மீரில் தோட்டக்கலை, பண்ணைகளைப் பார்வையிட்டார்; சம்பந்தப்பட்ட துறையினருடன் ஆலோசனை மேற்கொண்டார்
Posted On:
04 JUL 2025 5:17PM by PIB Chennai
மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் இன்று ஜம்மு காஷ்மீரின் ஷாலிமரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலை ஆராய்ச்சிப் பிரிவை பார்வையிட்டார். தோட்டக்கலை பண்ணைகளை பார்வையிட்டு அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் விவசாயம், அதனுடன் தொடர்புடைய துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரதிநிதிகளுடன் விரிவான கலந்துரையாடலை அவர் நடத்தினார்.
ஜம்மு காஷ்மீரில் செயல்படுத்தப்படும் தோட்டக்கலைத் தி்ட்டங்கள் குறித்து அமைச்சருக்கு விரிவாக விளக்கப்பட்டது.
அப்பல்கலைக்கழத்தில் பயிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுடனும் அமைச்சர் கலந்துரையாடினார். ஆப்பிள், ஆப்ரிகாட், வால்நட், பாதாம், பெர்ரி உள்ளிட்ட தோட்டக்கலை விளைபொருட்களை மாணவர்கள் காட்சிப்படுத்தி இருந்தனர். அறுவடைக்கு பிந்தைய பாதுகாப்பு முயற்சிகள் குறித்து மாணவர்களின் செயல்பாட்டுக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
விவசாயிகள், தேனீ வளர்ப்பவர்கள், குளிர் சேமிப்பு கிடங்கு உரிமையாளர்கள், குங்குமப்பூ உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் அமைச்சர் கலந்துரையாடினார். விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களை அவர் எடுத்துரைத்தார். வேளாண் துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களை இணைத்த இந்த கலந்துரையாடல் இந்தத் துறையில் உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்த திறந்த உரையாடலுக்கான தளத்தை வழங்கியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2142234
****
AD/TS/PLM/KPG/DL
(Release ID: 2142319)