தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எம் 2 எம்/ஐஓடி சாதனங்களில் பயன்படுத்தும் இ-சிம் கார்டுகளை விற்பனை செய்வதற்கான ஒழுங்குமுறை கட்டமைப்பு” குறித்த ஆலோசனைக் கட்டுரையை டிராய் வெளியிடப்பட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 04 JUL 2025 5:24PM by PIB Chennai

எம் 2 எம்/ஐஓடி சாதனங்களில் பயன்படுத்துவதற்கான வெளிநாட்டு தொலைத்தொடர்பு சேவை விநியோகஸ்தர்களின் சிம் மற்றும் இ-சிம் கார்டுகளை விற்பனை செய்யும் ஒழுங்குமுறை கட்டமைப்பு, ஏற்றுமதி நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு ஆலோசனைக் கட்டுரையை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

முன்னதாக, மத்திய தொலைத்தொடர்புத் துறை (டிராய்) 17.09.2024 தேதியிட்ட குறிப்பின் மூலம் ஏற்றுமதி நோக்கங்களுக்கான உபகரணங்களில் வெளிநாட்டு தொலைத்தொடர்பு சேவை விநியோகஸ்தர்களின் சிம்/இசிம் கார்டுகளை விற்பனை செய்வதற்கான தடையில்லாச் சான்றிதழை வழங்குவதற்கும், புதுப்பிப்பதற்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த பரிந்துரைகளை வழங்குமாறு டிராயிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இது தொடர்பான ஆலோசனைக் கட்டுரை டிராயின் இணையதளத்தில் (www.trai.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்து பங்குதாரர்களிடமிருந்து எழுத்துப்பூர்வ கருத்துகள் 01.08.2025-க்குள் வரவேற்கப்படுகின்றன, மேலும் எதிர் கருத்துகள் 18.08.2025-க்குள் வரவேற்கப்படுகின்றன.

கருத்துகள்/ எதிர் கருத்துகளை மின்னணு வடிவில் டிராய் ஆலோசகர் திரு அகிலேஷ் குமார் திரிவேதிக்கு advmn@trai.gov.in என்ற இணைய முகவரிக்கு அனுப்பலாம். இது குறித்த மேலும் தகவலுக்கு, +91-11-20907758 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

***

AD/TS/GK/AG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2142305) வருகையாளர் எண்ணிக்கை : 23
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी