பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லி ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற இன்வெஸ்ட் - 2025 என்ற சர்வதேச மாநாட்டில் ஏர் மார்ஷல் வி கே கார்க் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 04 JUL 2025 4:53PM by PIB Chennai

விமானப் படையின் பராமரிப்புப்  பிரிவு அதிகாரி  ஏர் மார்ஷல் விஜய் குமார் கார்க் இன்று (ஜூலை 04-ம் தேதி) தில்லி ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற இன்வெஸ்ட் - 2025 என்ற அதிர்வு பொறியியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச மாநாட்டில் கெளரவ விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இம்மாநாட்டில் உரையாற்றிய ஏர் மார்ஷல் கார்க், அமைப்பு ரீதியிலான நம்பகத்தன்மையை மேம்படுத்துவதில் நவீன கண்டறிதல் முறைகள், முன்கூட்டிய பராமரிப்பு மற்றும் பொறியியல் கண்டுபிடிப்புகளின் முக்கிய பங்களிப்பு குறித்து எடுத்துரைத்தார். மாறிவரும் உலக அளவிலான புவிசார் அரசியல் சூழலின் பின்னணியில், பாதுகாப்புத் துறையில் தற்சார்பு நிலை, புதுமை கண்டுபிடிப்புகள், நவீனமயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை விரைவாக வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

இந்திய விமானப்படையின் உள்நாட்டுமயமாக்கல் முயற்சிகளை ஆதரிப்பதற்காக கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை இடையே வலுவான ஒருங்கிணைப்பு அவசியம் என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தில்லி பிராந்தியம் முழுவதும் உள்ள பல்வேறு அடிப்படை பராமரிப்பு மற்றும் பழுது பார்த்தல் பிரிவுகளைச் சேர்ந்த பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கல்வி-தொழில்-பாதுகாப்பு ஆகிய துறைகளிடையேயான முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது.

******

(Release ID: 2142223)

AD/TS/SV/KGP/KG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2142291) வருகையாளர் எண்ணிக்கை : 27
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी