எஃகுத்துறை அமைச்சகம்
எம்ஓஐஎல் நிறுவனம் 2025 ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில் புதிய உச்சங்களை எட்டியுள்ளது
प्रविष्टि तिथि:
03 JUL 2025 11:33AM by PIB Chennai
மாங்கனீஸ் தாது இந்தியா நிறுவனம் (எம்ஓஐஎல்) வலுவான வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில் ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக 1.68 லட்சம் டன் மாங்கனீஸ் தாது உற்பத்தியைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிட 2% அதிகமாகும்.
2025 ஏப்ரல் - ஜூன், காலகட்டத்தில், எம்ஓஐஎல் நிறுவனம் பின்வரும் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பதிவு செய்துள்ளது:
எப்போதும் இல்லாத சிறந்த காலாண்டு உற்பத்தி 5.02 லட்சம் டன்கள் ஆகும். முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தைவிட இது 6.8% அதிகமாகும்.
முன் எப்போதும் இல்லாத வகையில் சிறந்த காலாண்டு ஆய்வு மைய துளையிடல் பணியாக 34,900 மீட்டர் அளவுக்கு பணிகளை மேற்கொண்டுள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தைவிட 16.2% அதிகம்.
இந்த முன்னேற்றங்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த எம்ஓஐஎல் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் திரு அஜித் குமார் சக்சேனா, 2025 ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில் நிறுவனத்தின் மகத்தான செயல்திறன் அதன் வலுவான அடிப்படைகளையும் தொடர்ச்சியான வளர்ச்சிக் கண்ணோட்டத்தையும் பிரதிபலிக்கிறது என்றார்.
**
(Release ID: 2141732)
AD/TS/PLM/KPG/KR
(रिलीज़ आईडी: 2141790)
आगंतुक पटल : 18