சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2025-26 நிதியாண்டில் கனிமம், இரும்பு அல்லாத உலோக உற்பத்தி அதிகரிப்பு

Posted On: 01 JUL 2025 3:10PM by PIB Chennai

2025-26 நிதியாண்டில் நாட்டில் சில முக்கிய கனிமங்களின் உற்பத்தி தொடர்ந்து வளர்ச்சியை எட்டியுள்ளது. கனிம பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு விதிகளின்கீழ் மொத்த கனிம உற்பத்தியில் இரும்புத் தாது 70 சதவீதமாக உள்ளது. 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-மே) 52.7 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த இரும்புத் தாது உற்பத்தி 2025-26 நிதியாண்டில் (ஏப்ரல்-மே) 53 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. 

2025-26 நிதியாண்டில் (ஏப்ரல்-மே) மாங்கனீசு தாது உற்பத்தி 1.4%-ஆக அதிகரித்து 0.70 மில்லியன் மெட்ரிக் டன்னாக உள்ளது, இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 0.69 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது.

நடப்பு நிதியாண்டில் பாக்சைட் தாது உற்பத்தியும் 0.9% அதிகரித்து 4.73 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது, இது 2024-25 நிதியாண்டில் 4.69 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது.

துத்தநாக தாது உற்பத்தி நடப்பு (2025-26) நிதியாண்டில் (ஏப்ரல்-மே) 3.7% அதிகரித்து 0.28 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது, இது 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-மே) 0.27 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது.

சுண்ணாம்புக்கல் உற்பத்தி 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-மே) 80.10 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது, இது 2025-26 நிதியாண்டில் (ஏப்ரல்-மே) 1.6% அதிகரித்து 81.40 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.

இரும்பு அல்லாத உலோகத் துறையில், 2025-26 நிதியாண்டில் (ஏப்ரல்-மே) முதன்மை அலுமினிய உற்பத்தி கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 1.3% வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்த  நிதியாண்டில் இது 6.98 லட்சம் டன்னாக இருந்தது. 2025-26 நிதியாண்டில் (ஏப்ரல்-மே) 7.07 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட செம்பு உற்பத்தி 2024-25 (ஏப்ரல்-மே) காலகட்டத்தில், 0.69 லட்சம் டன்னிலிருந்து 0.99 லட்சம் டன்னாக உயர்ந்து 43.5% வளர்ச்சிக்கண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2141133

***

AD/TS/GK/SG/KR/DL


(Release ID: 2141324)
Read this release in: English , Urdu , Hindi