மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
மத்திய அமைச்சர்கள் டாக்டர் மன்சுக் மண்டவியா மற்றும் திரு அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில், மை பாரத் 2.0 தளத்தை உருவாக்க டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனுடன் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
Posted On:
30 JUN 2025 6:59PM by PIB Chennai
நாட்டின் இளைஞர்களுடன் டிஜிட்டல் ஈடுபாட்டை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய முயற்சியாக, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் புதுதில்லியில் இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
மேம்படுத்தப்பட்ட தேசிய இளைஞர் தளம், நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்து அவர்களை இணைக்க தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளைப் பயன்படுத்தும். மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டவியா மற்றும் ரயில்வே, தகவல் ஒலிபரப்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிகழ்வில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ் கிருஷ்ணன், இளைஞர் விவகாரத் துறை செயலாளர் டாக்டர் பல்லவி ஜெயின் கோவில்; மற்றும் இதர மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இளைஞர் விவகாரத் துறையின் இணைச் செயலாளர் திரு நிதேஷ் குமார் மிஸ்ரா மற்றும் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனின் மேலாண்மை இயக்குநர் & தலைமை நிர்வாக அதிகாரி திரு நந்த் குமாரும் ஆகியோர் மை பாரத் 2.0 தளத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், "இன்று, வாழ்க்கையை மாற்றும் பொது டிஜிட்டல் தளங்களை நாம் உருவாக்கும்போது, மை பாரத் திட்டத்தின் பின்னணியில் உள்ள யோசனை, யுபிஐ, டிஜி லாக்கர் அல்லது பொதுவான கணினி வசதி உடனான நமது செயல்பாடுகளில் இருந்து வேறுபட்டதல்ல. குறிக்கோள் ஒன்றுதான்: நோக்கத்துடன் அளவிடுதல், வேகத்துடன் தாக்கத்தை ஏற்படுத்துதல்."
"இந்தியாவின் மக்கள் தொகையில் 65% பேர் இளைஞர்கள். இது நமது மிகப்பெரிய பலம் மற்றும் வாய்ப்பு" என்று மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டவியா தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2140894
---
(Release ID: 2140894)
AD/RB/DL
(Release ID: 2140977)