புவி அறிவியல் அமைச்சகம்
புதுச்சேரியில் கடலோர செயல் திட்டம், ஆழ்கடல் வாய்ப்புகள் குறித்து டாக்டர் ஜிதேந்திர சிங் மற்றும் துணை நிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் ஆலோசனை
Posted On:
30 JUN 2025 3:26PM by PIB Chennai
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு); டாக்டர் ஜிதேந்திர சிங் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் திரு கே. கைலாஷ்நாதன் ஆகியோர் இன்று சடலோர செயல்திட்டம் மற்றும் ஆழ்கடல் வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
நீடித்த வளர்ச்சி, நீண்டகால பொருளாதார முன்னேற்றங்களுக்காக புதுச்சேரியில் கடல்சார் சொத்துக்களைப் பயன்படுத்துவது குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
புதுச்சேரி கடற்கரைகளில் அடிக்கடி ஏற்படும் கடல் அரிப்பு தொடர்பான பிரச்சனை குறித்து டாக்டர் ஜிதேந்திர சிங் கவலை தெரிவித்தார். 'கடல் தூய்மை, கடல் பாதுகாப்பு ' என்ற பிரச்சாரத்தின் மூலம் கடல்சார் வளங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் தற்போது நிலையான மற்றும் முறையாக கட்டமைக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளின் அவசியம் குறித்து அமைச்சர் வலியுறுத்தினார். "கடற்கரையை சுத்தம் செய்தல், கடலோர மேலாண்மைக்கான நிரந்தர வழிமுறையை உருவாக்குவது குறித்தும் அவர் விவாதித்தார். இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும், வழிகாட்டுதல்களையும் மத்திய புவி அறிவியல் அமைச்சகம் வழங்கும் என்று கூறினார். மேலும் இதனை செயல்படுத்தும் வகையில் புதுச்சேரி தலைமைச் செயலாளருடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2140765
-------
(Release ID: 2140765)
AD/TS/SV/KPG/KR
(Release ID: 2140885)