கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
தியாகமும் ஒழுக்கமும் உண்மையான தேசபக்தியின் அடித்தளங்கள்: மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால்
Posted On:
29 JUN 2025 6:52PM by PIB Chennai
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் சங்கத்தின் பொன்விழாவின் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் சங்கமானது, தியானம், மனித மதிப்புகள் மற்றும் ஆன்மீக ஒழுக்கத்தின் மூலம், தெளிவை நோக்கி சமூகத்தை வழிநடத்தும் ஒரு சிறந்த சக்தியாக திகழ்கிறது என கூறினார்.
கடந்த ஐம்பது ஆண்டுகளாக, பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் அமைப்பு தனிப்பட்ட நபர்களின் வாழ்வை மட்டுமல்லாமல் நமது சமூகத்தின் ஆன்மாவையும் மேம்படுத்தியுள்ளது என்று திரு சோனாவால் கூறினார். கருணை, பண்பு மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்படும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் உள்ளடக்கிய வளர்ச்சி மாதிரி, பிரம்ம குமாரிகள் கடைபிடிக்கும் மதிப்புகளுடன் இசைந்ததாக உள்ளது என்பதை திரு சோனாவால் குறிப்பிட்டார். தியாகம், ஒழுக்கம், பொறுமை, தார்மீக வலிமை ஆகியவை தேசபக்தி மற்றும் வலுவான தேசத்தின் அடித்தளங்கள் என்று திரு சர்பானந்த சோனாவால் கூறினார்.
பிரம்ம குமாரிகள் அமைப்பு, தேச ஒற்றுமை மற்றும் ஆன்மீக வழிகாட்டுதல் ஆகியவற்றில் ஆற்றும் பணிகளுக்காக அந்த அமைப்பை அமைச்சர் பாராட்டினார். இந்தக் கொள்கைகளால் வழிநடத்தப்பட்டு நாம் முன்னேறினால், உண்மையிலேயே வலுவான, ஒன்றுபட்ட மற்றும் தார்மீக ரீதியாக அதிகாரம் பெற்ற, வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க முடியும் என திரு சர்பானந்த சோனாவால் தெரிவித்தார்.
*****
(Release ID: 2140620)
AD/TS/PLM/RJ
(Release ID: 2140637)
Visitor Counter : 3