புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கழிவுகளிலிருந்து எரிசக்தி உருவாக்கும் திட்டங்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் - புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டது

प्रविष्टि तिथि: 28 JUN 2025 8:52AM by PIB Chennai

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், தேசிய உயிரி எரிசக்தி திட்டத்தின் கீழ் கழிவுகளிலிருந்து ஆற்றலை உருவாக்கும் திட்டத்திற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த திருத்தங்கள் இந்தியாவில் உயிரி கழிவுகளிலிருந்து ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான மிகவும் திறன் வாய்ந்த வெளிப்படையான, செயல்திறன் சார்ந்த சூழல் அமைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், மத்திய நிதி உதவியை விரைவுபடுத்துதல், தனியார் மற்றும் பொதுத்துறையினர் வணிகம் செய்வதை எளிதாக்குதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய நடைமுறைகளின் கீழ், காகித ரீதியான பணிகளைக் குறைத்தல், ஒப்புதல் நடைமுறைகளை எளிதாக்குதல் போன்ற பல செயல்முறைகளை அறிமுகப்படுத்தி செயல்பாடுகளை அமைச்சகம் எளிமைப்படுத்தியுள்ளதுகழிவு மேலாண்மையில் முன்னேற்றம், 2070-ம் ஆண்டுக்குள் நிகர-பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான இந்தியாவின் பரந்த இலக்கு ஆகியவற்றுக்கு ஏற்ப இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

****

 

(Release ID: 2140328)

AD/TS/PLM/SG

 

 

 


(रिलीज़ आईडी: 2140417) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Malayalam