புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
“வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளின் உற்பத்தி மதிப்பு குறித்த புள்ளி விவர அறிக்கை (2011-12 முதல் 2023-24)” வெளியிடப்பட்டுள்ளதுபுதுதில்லி, ஜூன் 27, 2025
Posted On:
27 JUN 2025 4:00PM by PIB Chennai
“வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளின் உற்பத்தி மதிப்பு குறித்த புள்ளி விவர அறிக்கையை (2011-12 முதல் 2023-24)” மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளி விவர அலுவலகம் இன்று வெளியிட்டது. இந்த அறிக்கை அமைச்சகத்தின் https://mospi.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் கிடைக்கும்.
வேளாண் பயிர்கள், கால்நடை, வனப்பயிர்கள், மீன்வளம் உட்பட வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளின் உற்பத்தி மதிப்பு குறித்த விரிவான அட்டவணைகள் இந்த ஆவணத்தில் இடம் பெற்றுள்ளன. அகில இந்திய அளவில் 2025 பிப்ரவரி 28 அன்று தேசிய கணக்குகள் புள்ளி விவரம் என்ற வடிவத்தில் வெளியிடப்பட்ட ஒருங்கிணைப்புக்குப் பின் இந்த விரிவான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் ஒரு சில முக்கிய அம்சங்கள்:
வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளின் ஒட்டு மொத்த மதிப்புக் கூட்டல் நடப்பு விலைகளில் 225 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதாவது 2011-12-ல் ரூ.15 லட்சத்து 2000 கோடி என்பதிலிருந்து 2023-24-ல் ரூபாய் 48 லட்சத்து 78,000 கோடியாக அதிகரித்துள்ளது.
வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளின் ஒட்டு மொத்த மதிப்புக் கூட்டல் நிலையான விலைகளில் 54.6 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதாவது 2011-12-ல் ரூ.19 லட்சத்து 8000 கோடி என்பதிலிருந்து 2023-24-ல் 29 லட்சத்து 49,000 கோடியாக அதிகரித்துள்ளது.
தானிய வகைகளில் நெல் மற்றும் கோதுமை நிலையான விலைகளில் ஒட்டு மொத்த உற்பத்தி மதிப்பு 2023-24-ல் 85 சதவீதமாக இருந்தது.
பழ வகையில் நிலையான விலைகளில் ஒட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் மாம்பழத்தை (46,100 கோடி) வாழைப்பழம் (47,000 கோடி) விஞ்சியது. 2011-12 முதல் 2021-22 வரை ஒட்டு மொத்த பழங்களில் மாம்பழம் நிலையான விலைகளில் ஒட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் முதன்மையானதாக இருந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2140160
***
AD/TS/SMB/RR/DL
(Release ID: 2140254)